Wednesday, June 4, 2008

அமெரிக்காவில் விஜய்! வண்ணப்படங்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படம் முடித்ததுமே ஓய்வுக்காக இமயமலை போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். இப்போது இளைய தளபதியும் சூப்பர் ஸ்டார் பாணியில் 'குருவி' முடிந்ததுமே அமெரிக்கா சென்றிருக்கிறார். கலிபோர்னியாவில் அவர் அமெரிக்க ரசிகர்களோடு 'குருவி' பார்த்தாராம்.

'உதயம்' தியேட்டரில் படம் பார்த்த எஃபெக்ட்டை அமெரிக்க ரசிகர்கள் விஜய்க்கு அளித்திருக்கிறார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து விசில், கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்ததாம். அமெரிக்காவிலும் தனக்கு கிடைத்த அபார வரவேற்பால் அகமகிழ்ந்துப் போன விஜய் ரசிகர்களோடு ரொம்பவும் நெருக்கமாக பழகினாராம்.

வண்ணப்படங்களை மின்னஞ்சலில் அனுப்பிய கலிபோர்னியா வாசகர் சிவகுமாருக்கு நன்றி!







0 comments: