Thursday, June 19, 2008

தசாவதாரம் வசூல் நூறு கோடி!


உலகிலேயே பத்து வேடங்களில் ஒரே நடிகர் நடித்த முதல் படம் என்ற வகையில் தசாவதாரம் ஏற்கனவே உலகசாதனை புரிந்திருக்கிறது. சர்வதேச சினிமா சந்தையில் இப்படத்தின் ஓபனிங் வசூல் மற்றொரு உலகசாதனையை புரிந்திருக்கிறது. இதுவரை தமிழ் சினிமா எதுவும் பெற்றிராத மிகப்பெரிய வரவேற்பு தசாவதாரம் திரைப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. படம் ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 21 கோடி வசூலித்திருக்கிறது. சென்னை மாநகரில் மட்டும் ஒருவார வசூல் மூன்று கோடியை எட்டிப் பிடித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக தசாவதாரம் உலக அளவில் முதல் ஒரு வாரத்திலேயே நூறு கோடி ரூபாயை வசூல் ரீதியாக சம்பாதிக்கும் என்றும் எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்னை மாநகரில் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட தசாவதாரம் முதல் மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் (சரியாக 97 லட்சத்து ஐம்பது ஐந்து ஆயிரத்து முன்னூற்றி தொண்ணூற்றி ஏழு ரூபாய்) வசூலித்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என்று எல்லாத் தரப்பு சினிமா வட்டாரத்தையும் மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது. சென்னை மாநகராட்சி இப்படத்துக்கு சிறப்பு அனுமதியாக ஒவ்வொரு தியேட்டரிலும் வாரநாட்களிலும் கூட ஐந்து காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி தந்திருக்கிறது. தமிழ் படங்களுக்கு அதிக வசூலை வாரித்தரும் மதுரை, கோவை சினிமா மாவட்டங்களிலும் இதே நிலைமை. இன்னமும் அதிக பிரிண்டுகள் போட்டு அதிக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு யோசித்து வருகிறது.

தெலுங்கில் வெளியிடப்பட்ட தசாவதாரம் திரைப்படம் ஹைதராபாத் நகரில் 25 பெரிய திரையரங்குகளில் 34 திரைகளில் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடி ஓபனிங் வசூலில் சாதனை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவின் நிஜாம் சினிமா ஏரியாவுக்கு மட்டுமே 45 பிரிண்டுகள் போடப்பட்டு வெளியாகியிருக்கிறது. கேரளாவிலும் 50 தியேட்டர்களில் தசாவதாரம் வெளியாகி அரங்குநிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்துக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை விட அயல்நாடுகளில் அபார வரவேற்பு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் ஐம்பது நகரங்களில் வெளியிடப்பட்ட தசாவதாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த தென்னிந்தியப் படமும் அங்கே பெறாத வரவேற்பு இது. அமெரிக்காவில் தமிழில் வெளியிடப்பட்டதை விட தெலுங்கில் வெளியிடப்பட்ட தசாவதாரத்துக்கு கூட்டம் அலைமோதுகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஷ் புஷ் வேடத்தில் கமலை காண்பதற்காக அமெரிக்கர்களும் தசாவதாரம் திரைப்படத்தை காண ஆவலோடு திரையரங்குக்கு வருகிறார்கள். ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடப்பட்டு அமெரிக்காவில் பல தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது.

மலேசியாவில் 58 தியேட்டர்களில் வெளியான தசாவதாரம் முதல் வாரத்தில் 6 லட்சம் டாலர்களை வசூலித்திருக்கிறது. பிரிட்டனில் மிகக்குறைவான திரைகளில் வெளியிடப்பட்டிருந்தாலும், வெளியிடப்பட்ட முதல் மூன்று நாட்களில் இரண்டரை லட்சம் டாலர் வசூலித்திருக்கிறது. கனடாவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் இப்படத்தை வினியோகித்திருக்கிறது. முதல் தடவையாக தமிழ்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கும் வால்ட் டிஸ்னி நிறுவனம் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுக்காக டைம் ஸ்கொயர் தியேட்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அமெரிக்க பத்திரிகையாளர்களும் படத்தை ஐநா அதிகாரிகளோடு கண்டு ரசித்துப் பாராட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவில் இப்படத்தை வெளியிட்டிருக்கும் நர்மதா டிராவல்ஸ் நிறுவனத்தார் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

படம் வெளியிடப்பட்டதுமே நிறைய எதிர்மறை விமர்சனங்களையும் கமல்ஹாசன் சந்தித்தார். இந்தப்படத்தின் வசூல் விமர்சகர்களின் வாயை அடைக்கும், இப்படம் குறித்து இனி எதுவும் பேசமாட்டேன் என்று கமல் அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

45 comments:

  1. said...

    Lie.major lie

  2. said...

    Mr. Rajkumar we don't have any intension to lie here. Some time Truth may also bitter you guys :-)

  3. Anonymous said...

    wow, that's a great news !! thx

  4. Anonymous said...

    உண்மைய சொன்னால் ராஜ்குமார் உங்களுக்கு எங்க எரியுது ராஜ் !

    KAMAL HASSAN ROCKS !!!

    இந்த லிங்க் கொஞ்சம் பாருங்க.


    "Biggest opening in my career": Kamal
    http://sify.com/movies/telugu/fullstory.php?id=14696834

  5. said...

    Great !!!

  6. Anonymous said...

    தூள் !

    சூப்பர் !!

    கமல் கலக்கறாப்ல !

    இது "மர்மயோகி" மற்றும் "மருதநாயகத்திற்கும்' தொடரட்டும்.

  7. Anonymous said...

    May I know the source of this news?

  8. said...

    no need to lie as it is corroborated by economic times and boxofficemojo.com which is an authority for international boxoffice.

  9. said...

    //May I know the source of this news?//

    நண்பரே! நாங்களே ஆயிரம் தியேட்டர்களை நடத்துகிறோம். ஒரு படம் ஹிட்டா அல்லது ஃப்ளாப்பா என்பது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ எங்களுக்கு நிச்சயம் தெரியும் :-)

  10. Anonymous said...

    //May I know the source of this news?//

    idho irukku anony

    http://economictimes.indiatimes.com/Entertainment/The_Happening_grosses_315_m
    n_in_US/articleshow/3135416.cms

  11. said...

    "நண்பரே! நாங்களே ஆயிரம் தியேட்டர்களை நடத்துகிறோம். ஒரு படம் ஹிட்டா அல்லது ஃப்ளாப்பா என்பது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ எங்களுக்கு நிச்சயம் தெரியும் :-)"

    in this list you add any operation theater??

    :-))

    puduvai siva

  12. said...

    Good joke Siva.

    Conducting an operation theatre is not easy when comparing to Cinema theatre :-)

  13. said...

    \\நண்பரே! நாங்களே ஆயிரம் தியேட்டர்களை நடத்துகிறோம். ஒரு படம் ஹிட்டா அல்லது ஃப்ளாப்பா என்பது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ எங்களுக்கு நிச்சயம் தெரியும் :-)
    \\
    excellent answer. three cheers

    please update the collection details of the films. it is really interesting.

  14. said...

    நாங்க நிஜமாவே நம்பிட்டோம் சார் ;)

  15. said...

    செங்கல்பட்டை தாண்டி படம் ஓடாதுண்ணு யாரோ ஒரு அறிவுஜீவி சொன்னதாக ஞாபகம்.

  16. said...

    please check with this..!
    :))

    http://economictimes.indiatimes.com/Entertainment/The_Happening_grosses_315_mn_in_US/articleshow/3135416.cms

    Coming to the domestic market or rather the regional market, Kamal Hassan’s Dasavataram raked in Rs 3 crore in Chennai, and Rs 21 crore for the whole of Tamil Nadu. In the non-Southern markets, which got about 80% occupancy, the film grossed about Rs 60 lakh in the first three days of its running.

    The film is anticipated to rake in close to Rs 100 crore as its theatrical revenue at the end of this week, as Chennai theatre owners state that the bookings for the next 10 days are house-full. If compared to Rajnikant’s Sivaji the film grossed over 25 crore in its first one week. Given the current figures, Kamal Hassan is currently one up.

  17. said...

    ஆஹா ஆஹா மிகவும் சந்தோஷமான செய்தி, சிலருக்கு எங்கேயோ எரிகின்றது நன்றாகத் தெரிகின்றது. எத்தனை எதிர் மறை விமர்சனங்கள் வந்தாலும் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவனை அசைக்கமுடியாது. மர்மஜோகியும் நிச்சயம் ஹிட்டுத்தான்.

    வாழ்த்துகள் சாய்மீரா அப்படியே சிம்ரன் சின்னத்திரை சிடிகளையும் வெளியிடுங்கள். தர்மயுத்தம் அட்டகாசமாக தொடர்கின்றது.

  18. said...

    ஹலோ வந்தியத்தேவன்,

    உள்ளுக்குள் அழுதுவிட்டு வெளியே சிரிக்கும் உங்களை பார்த்து அழுவதா சிரிப்பாதானு தெரியலை.

    // மர்மஜோகியும் நிச்சயம் ஹிட்டுத்தான்//

    I liked this joke


    //எத்தனை எதிர் மறை விமர்சனங்கள் வந்தாலும் //

    இந்ததளவுக்கு நீங்க ஒத்துகிட்டதே பெரிய விசயம். விமர்சணங்களை ஏத்துக்க மணமில்லாத நீங்கள் கமல் ரசிகராக இருப்பதை கமல் கூட விரும்ப மாட்டார்

  19. said...

    கமல் ரஜினி ரசிகர்களே சண்டை வேண்டாம். அடுத்ததாக அடுத்த மாதம் குசேலன் ரிலீஸ் செய்கிறோம். தசாவதாரம் போல அதையும் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக்க கோருகிறோம்.

  20. said...

    மிஸ்டர் பிளீச்சிங் பவுடர்
    முதலில் உங்கள் மனதில் இருக்கும் அழுக்கை அகற்றும். எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதனை வெற்றிப்படமாக்கியது என்னவோ கமலின் உழைப்புதான். நான் கமல் ரசிகந்தான் அதற்காக ரஜனி பிடிக்காது என்றில்லை. குசேலனையும் ரோபோவையும் ரொம்பவும் எதிர்பார்க்கின்றோம். ரஜனியோ கமலோ வெற்றி பெறுவது தமிழ்சினிமாதான். தமிழானக இதனை எண்ணிப்பாருங்கள்.

  21. said...

    திரைப்படம் வெற்றி, படக்குழுவினரது வெற்றியாக இருக்கலாம் .

    ஒவ்வொரு படத்தையும் , (அதிக பணம் கொடுத்து), வெற்றியடைய வைப்பத்தில் தமிழகத்திற்கு எந்தப்பெருமையும் இருப்பதாகத்தெரியவில்லை .

  22. said...

    கேட்கிறவன் கேணப்பய என்றால் கேப்பையில் நெய் வழியும் என்று சொல்வார்கள் என்ற பழமொழி உண்டு. நூறு கோடி வசூலிக்கும் என்ற யூகத்திற்கும், நூறு கோடி வசூல் என்ற செய்திக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு.

    எகானாமிக் டைம்ஸ் குழுமத்தை சார்ந்த டைம்ஸ் டிவியில் படம் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்கள். இதில் எது உண்மை.

    யூகங்களை நிகழ்ந்துவிட்ட செய்தியாக குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம்.கமலஹாசனின் கூற்றை லிங்காக கொடுத்து எனக்கு வயிறு எரிவதாக ஒருவர் சொல்கிறார். சிரிப்புத்தான் வருது. நான்கு தியேட்டர்களில் ரிலீஸ் செய்த நிலை மாறி நாற்பது தியேட்டர்களில் ரீலீஸ் செய்தால் முதலில் காசு நிறையத்தான் கிடைக்கும். அதன் பின்பு எப்படி போணியாகுதுன்னு பார்ப்போம்.

    ராஜ்குமார்

  23. said...

    Dasavatharam fails to live up to billing
    6/17/2008 9:52:25 AM

    Dasavatharam bombs at the box office
    Where movies are concerned, in most cases the more hype about the movie, the less good it does to the film. Tamil movie Dasavatharam is no exception to this fact.

    After all the Hype surrounding Kamal Hassan's newest movie --Dasavatharam--, it failed to live up to expectations and sank at the box office.

    With all the hype surrounding the film and the billions spent on the movie's promotion one would have expected something better than just special effects and drama.

    While the movie dampened the audience's expectations. the complexity of the storyline is what seems to dissapoint have disappointed them. But on a more positive note all Kamal Hassan fans do agree on one thing; Hassan should be given due credit for the effort he put into portraying ten different roles.

    Dasavatharam opened to record breaking box office figures in Chennai but has not been able to keep up the interest levels of the audience over the weekend .
    The big budget and special effects, the visual treat and drama and the claims of

    'Dasavatharam' being a bigger success than Rajnikant's 'Sivaji' all seemed to hold the audience's flagging interests but ultimately the film turned out to be quite a let down.

    This only goes on to show no matter how big a star or how deep the producer's pockets it's the story that finally has to make a mark on the audience.


    Link:http://timesnow.tv/NewsDtls.aspx?NewsID=9981

    இதப் பத்தி என்ன சொல்றீங்க? எது டாவு?

    அன்புடன்

    ராஜ்குமார்

  24. said...

    எகான்மிக்ஸ் டைம்ஸ் படி சென்னைய்யில் 3 கோடி.அடுத்த பத்தியிலே 17 தியேட்டரில் கிட்டத்தட்ட ஒரு கோடி. ஏன் இந்த முரண்பாடு.

    இன்னும் இரண்டு வாரம் பின்னாடி கணக்கு பார்போம்.

    அன்புடன்

    ராஜ்குமார்

  25. Anonymous said...

    "உலகிலேயே பத்து வேடங்களில் ஒரே நடிகர் நடித்த முதல் படம் "

    NOT TRUE, Please check this.

    Rolf Leslie - 27 parts in the life story of Queen Victoria, Sixty Years a Queen (1913).

    Lupino Lane - 24 parts in Only Me (1929).

    Joseph Henabery - 14 characters in the Birth of a Nation (1915).

    Robert Hirsch - 12 roles in No Questions on Saturday (1964).

    Thanks

  26. said...

    //கமல் ரஜினி ரசிகர்களே சண்டை வேண்டாம். அடுத்ததாக அடுத்த மாதம் குசேலன் ரிலீஸ் செய்கிறோம். தசாவதாரம் போல அதையும் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக்க கோருகிறோம்.//

    ஐயையோ.. வேண்டாமயயா.. வேண்டாம். தலைவர் படத்துக்கு வந்த நேரத்த பாருங்கய்யா.. நாங்க அதை 'சிவாஜி'யை விட ஹிட்டாக்கிக்குறோம்.

  27. said...

    தியேட்டர்களே 50 ரூபாய் டிக்கெட்டை
    250 ரூபாய்க்கு விற்றால் கோடிதான்.
    சகாதேவன்

  28. Anonymous said...

    Anony

    Within a week, Thasavatharam collected $4,632,719 in USA

    Multiply $4,632,719 with 42.7 for know the collection in rupees...

    Check this site to know overseas collection

    http://boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=24&p=.htm

  29. Anonymous said...

    //எகான்மிக்ஸ் டைம்ஸ் படி சென்னைய்யில் 3 கோடி.அடுத்த பத்தியிலே 17 தியேட்டரில் கிட்டத்தட்ட ஒரு கோடி. ஏன் இந்த முரண்பாடு.//


    தம்பி ராஜ்குமாரு

    //சென்னை மாநகரில் மட்டும் ஒருவார வசூல் மூன்று கோடியை எட்டிப் பிடித்திருக்கிறது.//

    //சென்னை மாநகரில் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட தசாவதாரம் முதல் மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்//

    ஒழுங்கா பதிவை படிச்சிட்டு பின்னூட்டம் போடுப்பா. முதல்லே சொல்லியிருக்கிறது ஒரு வார வசூல் 3 கோடி. அடுத்த பத்தியிலே சொல்லி இருக்கிறது 3 நாள் வசூல் ஒரு கோடி.

    அப்புறம் நீ கொடுத்த சுட்டியிலேயே என்னா இருக்குன்னு மொதல்லே படிச்சி பாரு

    //'Dasavatharam' being a bigger success than Rajnikant's 'Sivaji' all seemed to hold the audience's flagging interests//

    கமல் படம் ஓடுறதுலே உனக்கு மட்டும் எங்காவது எரியுதுன்னா படம் ஹிட் இல்லேன்னா ஆயிடுமா? வீட்டுக்கு போயி ஒரு பானை தண்ணியை குடிச்சி வயித்தெரிச்சலை தணிச்சுக்கோப்பா.

    க்றிஸ்டியன் ப்ளிட்சர்

  30. Anonymous said...

    //ஐயையோ.. வேண்டாமயயா.. வேண்டாம். தலைவர் படத்துக்கு வந்த நேரத்த பாருங்கய்யா.. நாங்க அதை 'சிவாஜி'யை விட ஹிட்டாக்கிக்குறோம்.//

    ரஜினி ரசிகர்களே குசேலனையும் பெய்லியர் ஆக்க போறிங்களா? வேண்டாமய்யா வேண்டாம்.

  31. said...

    //The big budget and special effects, the visual treat and drama and the claims of
    'Dasavatharam' being a bigger success than Rajnikant's 'Sivaji' all seemed to hold the audience's flagging interests but ultimately the film turned out to be quite a let down//

    Mr. Ananymous க்றிஸ்டியன் ப்ளிட்சர். Please read the sentence completely and understand the meaning. Please join tution if you do not know English.

    The movie is completing the first week only today. The collection claimed in ET is also for only three days.

    Have and ENO and cool down.

    Rajkumar

  32. said...

    Hi Guys,

    I watched this movie in Hyderabad and it’s really good. The movie is big hit in AP. The movie got a big opening in AP equal to Chiru movie.

  33. said...

    Hi Guys,

    I saw this movie in Hyderabad and it’s really good. The movie is big hit in AP. The movie got a big opening in AP equal to Chiru movie.

  34. Anonymous said...

    Rajkumar, what is your problem actually? Why can't you digest an real hit?

    முச்சு உடாமே பேசிகிட்டிருக்கிங்க

  35. said...

    சிங்கையில் இன்றிலிருந்து கூடுதலாக ஒரு தியேட்டரில் தசாவதாரம்.

  36. said...

    Dasa is really a Big Hit.

    It is about time Tamil cinema takes a giant leap and moves to the next level, and takes its audience with it. Kamalji aspired to do just that. Now the ball is in the audience´s court. It is make or break time for Tamil cinema. Are we ready to make movies about global issues, science and the future? Are we ready to be leaders in innovative ideas and science in our art forms? Are we ready for movies that make the audience think, be entertained and be inspired?

    Looks like the audience have decide to make this abig hit and are ready to move to next step.

    Come on guys. Face the truth. how long are you going to clap and whistle for the formulaic 5 songs and 5 fight stuff or the hero becoming rich in one song and taking revenge....

    Grow up guys... along with us, the country and and our thinking will grow.....

  37. Anonymous said...

    I think, these people are confusing with the news abt the failure of Thasavathar animation movie. Here in Singapore, Dasavatharam is screened in one more theatre (in Woodlands), and running with HOUSE FUL shows. As far as I know, the movie is good and going to be a historical hit. If u want to enjoy this movie fully, my suggestion is, see this movie for a second time.

  38. Anonymous said...

    I feel sorry for Rajkumar...

    Dont be silly and dont be foolish too..

    Better u try someother movie to compete with this..

    Take some cool water.. or even ice cubes..

    HASH

  39. Anonymous said...

    Rajkumar

    Dont sleep

    Come out of dreams

    Hash

  40. said...

    Hello Rajkumar,

    Where are you? did saw the 2 weeks collection of DASA. super hit all over the world...

    Dasa should be announced as a blockbuster..details are below
    Link 1 : This gives you the overall overseas collection of Dasavatharam for the opening weekend ( June 13-15 2008)

    http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=24&p=.htm
    Collection : $ 4,632,719

    Link 2 : This gives you the overall overseas collection of Dasavatharam for the opening weekend ( June 20- 22 2008)

    http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=25&p=.htm
    Gross Collection till date : $11,653,212

    Though i hate to do this, i had no other choice as this comparison alone can show the magnitude of the

    collection : Link 1 : This gives you the overall overseas collection of Shivaji for the opening weekend ( June 15 - 17 2007)

    http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2007&wk=24&p=.htm Collections : $1,324,861
    Link 2 : This gives you the overall overseas collection of Shivaji for the opening weekend ( June 22 - 24 2007)

    http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2007&wk=25&p=.htm
    Gross Collection till date : $3,705,252

    The difference between Dasavatharam and Shivaji during its first weekend : $ 4,632,719 - $1,324,861 = $ 3,307,858
    The difference between Dasavatharam and Shivaji gross collection at the end of the second weekend : $11,653,212 - $3,705,252
    = $ 7,947,960

    Dasa Rulesssssssssssssss

  41. said...

    Rajkumar where are you? DASA is big hit all ove the world . FYI

    Dasa should be announced as a blockbuster..details are below
    Link 1 : This gives you the overall overseas collection of Dasavatharam for the opening weekend ( June 13-15 2008)

    http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=24&p=.htm
    Collection : $ 4,632,719

    Link 2 : This gives you the overall overseas collection of Dasavatharam for the opening weekend ( June 20- 22 2008)

    http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=25&p=.htm
    Gross Collection till date : $11,653,212

    Though i hate to do this, i had no other choice as this comparison alone can show the magnitude of the

    collection : Link 1 : This gives you the overall overseas collection of Shivaji for the opening weekend ( June 15 - 17 2007)

    http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2007&wk=24&p=.htm Collections : $1,324,861
    Link 2 : This gives you the overall overseas collection of Shivaji for the opening weekend ( June 22 - 24 2007)

    http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2007&wk=25&p=.htm
    Gross Collection till date : $3,705,252

    The difference between Dasavatharam and Shivaji during its first weekend : $ 4,632,719 - $1,324,861 = $ 3,307,858
    The difference between Dasavatharam and Shivaji gross collection at the end of the second weekend : $11,653,212 - $3,705,252
    = $ 7,947,960

    Dasa Rulesssssssssssssss

  42. said...

    Dasavatharam – International market oscillates!

    By Behindwoods News Bureau.

    June 25, 2008

    While Kamal’s ten-role extravaganza is registering packed houses all over India, the international market presents a rather mixed response. Last week saw Dasavatharam tumbling and falling from its 12th position to a worrisome 19th position at the UK box office although with marginal effect on the collections. The movie collected $426,770


    during its second as opposed to Sivaji that collected $546,738 in its second week at the UK box office.

    Another interesting fact to be noted is that Dasavatharam is released in 8 more than theatres than Sivaji. Analysts predict Dasavatharam to fetch $700000 in total while Sivaji garnered $800000 during its run.

    While this is the status of UK box office, its Malaysian counterpart does not present a rosy picture either. The weekend has registered a collection of $1,208,007 while Sivaji garnered $1,471,454 during the same period. Malaysian trade experts aver that it would be a Herculean task for Dasavatharam to reach $ 2.5 million that Sivaji garnered during its run. To add to the woes, the Will Smith starrer Hancock is also releasing this weekend that is sure to dampen the collections.

  43. said...

    balaji:

    for the people like rajkumar and others who could not digest the success of dasavatharam, its mere waste to make them understand the real fact as they r fans of great grand mental.....so even if u write the numerical 1 and tell them its 1, they will say its zero.....cos thats their attitue problem...so lets not waste in making them understand...the whole world is started accepting the fact....he is searching the webpages who had published dasa's success and trying to find out anything favoring his side.....tat itself clearly shows his inability to digest the success of dasa.....come on yaar,,,,,,try to be a man,,,,,accept the fact.....if u say that "dasa is hit? then wait for kuselan it will break that record", then u r a true spirited man.....but simply making some false statements here will get u a nasty impression.....dont tend to be like women looking for some reasons to fight......

    PS: for ur information if u want the database for dasa's collection please go to this link, where u can find all the links available related to that.
    http://www.orkut.co.in/CommMsgs.aspx?cmm=53690&tid=5213106728399497203&na=1&nst=1

  44. said...

    rajkumar... nee innume thirunthalaya... Iyyo pavam... vayiru erinju karugi poyirukkume?

    Idukke ippadinna innum hindi version release agi, adutha vaaram all time records ellam beat pannitta enna pannuvenga? nan venumna kayiru vangi tharen... edo ennala mudinjadu pa

    amam, nenga mental hospitallarundu thapichuttingalame?

  45. Anonymous said...

    http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm

    தசாவதாரம் 250 கோடி!