Tuesday, June 10, 2008

குழந்தைகளை கவர சூப்பர் சுந்தரி ரெடி!

ஹீமேன், சூப்பர்மேன்னு எல்லாமே மேன் தானா? விமன் இல்லவே இல்லையா என்று கேட்பவர்களுக்கு இனிமேல் பதில் சொல்லலாம். வரும் ஜூன் 16 முதல் தினமும் திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 5.30 மணிக்கு கலைஞர் டிவி மூலமாக சூப்பர் சுந்தரி வருகிறார்.

நகைச்சுவை, அதிரடி ரெண்டும் தான் சூப்பர் சுந்தரியின் ட்ரேட்மார்க். அப்பாவிப் பெண்ணாக வருபவர் அநீதியை கண்டு சூப்பர் வுமனாக பொங்குகிறார். உமா ரியாஸ் சுந்தரியாக நடித்திருக்கிறார். இவருடன் நளினி, பாலு ஆனந்த், சாம்ஸ், அரவிந்த், மாறன், 'ஊர்வம்பு' லட்சுமி, வாசுவிக்ரம், 'லொள்ளுசபா' சாமிநாதன், கிரேஸிகுமார், அலெக்ஸ் பாண்டியன், சிவக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மோகன் இயக்க, தர்மராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கோபிநாத்தின் திரைக்கதைக்கு ரவிக்குமார் வசனம். கதை செந்தமிழன். கிரியேட்டிவ் ஹெட் சுபா வெங்கட்.







4 comments:

  1. Anonymous said...

    Damu pa kmu to?.. Nano ni klase blog man?

  2. Anonymous said...

    Yugs, daw nabasahan ko naman ni sa iban nga blog?

  3. Anonymous said...

    Considering the fact that it could be more accurate in giving informations.

  4. Anonymous said...

    Such a nice blog. I hope you will create another post like this.