சென்ற கோடை விடுமுறையின் போது சென்னை-600028 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த கோடைவிடுமுறையை குறிவைத்து சென்னை-28ல் நடித்த நடிகர்கள் நடித்த ”தோழா” திரைக்கு வருகிறது. சென்னை-28ல் நடித்த அஜய்ராஜ், நிதின்சத்யா, பிரேம்ஜி அமரன், வசந்த் விஜய் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தை சுந்தரேஸ்வரன் இயக்குகிறார். அரவோனா பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கப்படுகிறது. சாகித்யா, ஜெனிஃபர், லக்ஷனா என்று படத்தில் மூன்று கதாநாயகிகள்.
இளசுகளை குறிவைத்து வரும் இப்படம் முழுக்க முழுக்க காமெடியாம். இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி முதலில் கைகொடுக்க வருவது உறவல்ல, நட்புதான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறாராம் இயக்குனர். படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்திருப்பதோடு ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.
Tuesday, April 1, 2008
இன்னொரு சென்னை-600028?
Posted by PYRAMID SAIMIRA at 4/01/2008 03:17:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment