Tuesday, April 15, 2008

"சிங்கம்!” - இளைய தளபதின்னாலே அதுருதுல்லே!


இளையதளபதி விஜய் நடிக்கும் படங்களுக்கு எப்படித்தான் டைட்டில் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. தரணியின் “குருவி”க்கு பிறகு ஏவிஎம்மின் பெயரிடப்படாத படம் ஒன்று, பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏ.வி.எம். படத்துக்கு முன்பாகவே பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

போக்கிரி படத்தின் இந்திப் பதிப்பை சல்மான்கானை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. அது முடிந்ததுமே விஜய் படத்தை ஆரம்பித்து விடுவார் என்கிறார்கள். படத்துக்கு “சிங்கம்” என்று பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகிறது. “குருவி” படத்திலேயே நயன்தாரா விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்க வேண்டியது. குருவியை கோட்டை விட்டவர் சிங்கத்தில் கோட்டை ஏறுவார் போலிருக்கிறது.

போக்கிரி ஏற்படுத்திய அதிர்வுகளே இன்னமும் அடங்காத நிலையில் ”சிங்கம்” என்ற வெயிட் டைட்டிலே விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2 comments:

  1. said...

    ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல ரசிகரல்லாதோர் மத்தியிலும் தான்!! அட, ஆமங்க... லொல்லு சபாவின் இன்னொரு சிறந்த எப்பிசோடை எப்ப நாங்கள் பாக்குறது??

  2. said...

    மன்னிக்கனும் எப்பிசோடோட டைட்டில் சொல்ல மறந்துட்டேனே...

    அ-சிங்கம்!!

    ராம்பாலா சார் சீக்கிரம் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க!! நம்ம ரசிகர் வட்டம் கொல வெறியில சுத்திக்கிட்டு திரியுது!!