Wednesday, April 16, 2008

”போலிஸ்! போலிஸ்!”

ஆங்கிலம் போலில்லாமல் தமிழில் போலிஸ் படங்கள் மிகவும் குறைவு. போலிசை படத்தில் காட்டினாலும் வில்லனாகவோ, கெட்டவனாகவோ காட்டுவது அதிகம். ஒரு முறை தமிழக முதலமைச்சரே “போலிசை நல்லவர்களாக காட்டுங்கள்” என்று வேண்டுகோள் விடும் நிலை இருந்தது.

போலிசாரின் வாழ்க்கையை, போராட்டங்களை யதார்த்தமாக படம்பிடித்து வரப்போகும் திரைப்படம் “போலிஸ்! போலிஸ்!”. போலிஸ் என்ற சொல் பொதுமக்களிடையே மிக சாதாரணமாக புழங்கப்படும் சொல் என்பதால் இந்த தலைப்புக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்று நம்பலாம். ஸ்ரீகாந்த், ப்ருத்விராஜ் இளம் போலிஸ் அதிகாரிகளாக அசத்தப் போகிறார்கள்.

ஸ்ரீகாந்துக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம். ப்ருத்விராஜுக்கும் அதுபோலத்தான். குறிப்பாக ப்ருத்விராஜின் லேசான ஒன்றரைக்கண்ணை அவரது ரசிகைகள் மிகவும் ரசிக்கிறார்கள். ஹேண்ட்சம்மான இரண்டு பேரும் இணைந்து நடிப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கதாநாயகிகள் யாரென்பது இன்னமும் முடிவாகவில்லை. படத்துக்கு எடுக்கப்பட்ட “போட்டோ செஷன்” அமர்க்களமாக வந்திருக்கிறது. “போலிஸ்! போலிஸ்!” இன்னொரு ”காக்க காக்க”வாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

















1 comments:

  1. said...

    உஸ்... அப்பாடா ரெம்ப நாளா காமடி படம் இல்லாமல் தவியா தவிச்சு போய்ட்டோம்பா. வாழ்க ஸ்ரீகாந்த் அந்த குறையை தீர்க்க புறப்பட்டுவிட்டார்... ஹையா ஜாலி!!