Saturday, April 26, 2008

தசாவதாரம் இசை வெளியீடு படங்கள் மற்றும் படம் குறித்த கடைசிக்கட்ட தகவல்கள்!!

* கமல்ஹாசன், அசின் ஆகியோரோடு மல்லிகா ஷெராவத், ஜெயப்ரதா, ஜெயராம், நெப்போலியன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய நட்சத்திரங்கள் தசாவதாரத்தில் மின்னப் போகிறார்கள்.

* கே.எஸ். ரவிக்குமார் - இயக்கம், ஆஸ்கர் வி.ரவிச்சந்திரன் - தயாரிப்பு, ஹிமேஷ் ரேஷமைய்யா - இசை, கிரேஸி மோகன் - வசனம், ரவிவர்மன் - ஒளிப்பதிவு, அஸ்மித் குன்டர் - எடிட்டிங், மைக்கேல் வெஸ்ட்மோர் - ஒப்பனை, தியாகராஜன் - சண்டைக்காட்சி, வைரமுத்து - பாடல்கள், ப்ரையன் ஜெனிக்ஸ் - ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்.

* படத்தில் இடம்பெறும் முதல் மூன்று நிமிட காட்சிகளுக்கு மட்டுமே மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணத்தில் ஒரு மீடியம் பட்ஜெட் படமே எடுத்துவிடலாம்.

* அசின் முதன்முறையாக இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். பதினொன்றாம் நூற்றாண்டின் பிராமணப்பெண்ணாகவும், தற்கால நாகரிகப் பெண்ணாகவும் இரண்டு வேடங்கள்.

* படத்தில் வில்லனும் கமல் தானாம்.

* ஆயிரம் படகுகள் இடம்பெறும் பிரம்மாண்டமான போட்டிங் ரேஸ் காட்சி படத்தில் உண்டு. உலக அளவில் இதுபோன்ற ஒரு சேஸிங் காட்சி இதுவரை படமாக்கப்பட்டதில்லை.

* தசாவதாரம் திரைப்படத்துக்காக அச்சு அசலாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை சென்னை திரைப்பட நகரில் செட் அமைத்து உருவாக்கினார்கள்.

* சிதம்பரம் கோயிலை அச்சு அசலாக செட்டிங் மூலமாக படத்துக்காக உருவாக்கியிருக்கிறார்கள்.

* படத்தின் சுனாமி தாக்கும் ஒரு காட்சி மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

* பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் தோன்றுவது போல ஒரு காட்சி படத்தில் உண்டு. இதற்காக பிரெஞ்சு பாணியில் ஒரு கோட்டையும் பெரும் பொருட்செலவில் படத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

* படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் கீழே :


















2 comments:

  1. said...

    ஆஹா ஒரு ஹாலிவூட் நடிகரை தமிழ் கேசட் வெளியீட்டு விழாவில் பார்ப்பது சிறப்பான விஷயம்.தமிழுக்கு பெருமை...

  2. said...

    ஜாக்கி - மனதுக்கு இதமான முகம். குழந்தைத்தனமான அவரின் சிரிப்பும் பார்வையும் ஆகா..ஆகா... கமலுடன் ஜாக்கி.... தமிழ் சினிமாவின் இன்னும் எத்தனையோ சாதனைகள் பாக்கி இருக்கின்றன. மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும். பிரமிட் சாய்மீரா - தமிழ் சினிமாவின் ஒரு ஏவிஎம் போல அல்ல அதற்கும் மேலே வரவேண்டும். புகழ் பெறவேண்டும். எண்ணற்ற இளைஞர்களின் வாழ்விலும் ஒளியினை ஏற்றி வைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    கமலின் தசவாதாரம் வெற்றி பெறும்.. அதில் சந்தேகமே இல்லை...

    வாழ்த்துக்கள்...