Friday, April 4, 2008

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா!



13வது ஐரோப்பிய திரைப்பட விழா இப்போது இந்தியாவில் புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, கோழிக்கோடு மற்றும் புனே நகரில் நடந்து வருகிறது. சென்னையில் இவ்விழா ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 17 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தினங்களில் தென்னிந்திய பிலிம்சேம்பர் திரையரங்கில் உலகத்தரம் வாய்ந்த ஐரோப்பிய திரைப்படங்கள் தினமும் திரையிடப்படும்.

தி ஈரோப்பியன் யூனியன் மற்றும் தி இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன் நிறுவனங்களோடு இணைந்து இந்த விழாவினை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்துகிறது. ஏப்ரல் 7 மாலை 6.30 மணிக்கு சென்னை திரைப்பட வர்த்தக சபையின் திரையரங்கில் (பிலிம் சேம்பர் தியேட்டர்) நடைபெறும் துவக்க விழாவில் திரு. கே.ஆர்.ஜி (தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர்), திரு. இராமநாராயணன் (தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்), திரு. ஏ.சி.மோகன்தாஸ், இ.ஆ.ப., (இயக்குனர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு), திரு பி.எஸ்.சாமிநாதன் (நிர்வாக இயக்குனர், பிரமிட் சாய்மீரா குழுமம்) மற்றும் செல்வி த்ரிஷா (திரைப்பட நடிகை) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.

திரு. ஆண்டன் கோக்லா (கலாச்சார ஆலோசகர், ஸ்லோவேனிய குடியரசு தூதரகம்) மற்றும் திரு எஸ்.கண்ணன் (தலைவர் ICAF) ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகிப்பார்கள்.

இவ்விழாவில் திரையிடப்படும் திரைப்படங்கள்

0 comments: