Thursday, April 10, 2008

நாளையும் நமதே!


பி.எஸ். சாமிநாதன் - ஆறு நாடுகளில் இன்று ஆச்சரியத்தோடு உச்சரிக்கப்படும் பெயர் இது! ஆம், இவரது கனவுக் குழந்தையான ‘பிரமிட் சாய்மீரா' இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா உள்ளிட்ட ஆறுநாடுகளில் அமர்க்களமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தெளிவாகவும், தீர்க்கமாகவும், அதே நேரம் விரைவாகவும் சரியான முடிவுகளை எடுப்பது சாமிநாதனின் சிறப்பம்சம்.

அப்படி எவர் எடுத்த முடிவுதான் இன்று ‘பத்துக்கு பத்தாக' அரங்கேறியிருக்கிறது. அனுபவமும் தகுதியும் திறமையும் கொண்ட தயாரிப்பாளர்களை அழைத்து ‘பிரமிட் சாய்மீரா'வுக்காக திரைப்படங்கள் தயாரித்துக் கொடுக்கச் செய்யும் புதிய முயற்சி இதோ! உலகத் திரை வரலாற்றில் இதுவே முதல் முறை. இதுவரை எந்த கார்ப்பரேட் நிறுவனமும் செய்திராத செய்யத் துணியாத செயலும் கூட!

கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகையை, ஏற்கனவே அதே தொழில் நடத்திக் கொண்டிருப்பவர்கள் அச்சத்துடன் பார்ப்பது உலக வாடிக்கை. அந்த நிலையை உடைத்தெற்நித முதல் மற்றும் முன்னணி நிறுவனம் ‘பிரமிட் சாய்மீரா'.

வணிக வளாகங்களாக திரையரங்குகள் மாறிக் கொண்டிருந்த அவலம் தமிழகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது ‘பிரமிட் சாய்மீரா'வின் வருகைக்கு பிறகுதான். இன்றைய தேதியில் எண்ணூறு திரையரங்குகளை தன்னகத்தே கொண்டிருக்கும் மிகப்பெரிய தியேட்டர் செயின் நிறுவனம் என்பதால், திரையரங்குகள் படத்தை வெளியிட முன்வரும் விநியோகஸ்தர்களுக்கும் வேலை எளிது.

கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மக்கள் நம்பிக்கையோடு முதலீடு செய்யும் பணத்தை முடிந்த மட்டும் பன்மடங்காகப் பெருக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் பெரிய ஹீரோ, பெரிய நிறுவனம், பெரிய பிராஜக்ட் என வெற்றிவாய்ப்புகள் அதிகமுள்ள பிரம்மாண்டங்களை மட்டுமே நம்பியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது உலக விதி. ஆனால் ‘பிரமிட் சாய்மீரா'வுக்கோ விதிவிலக்கு!

“கார்ப்பரேட் நிறுவனங்களின் வலுவான அடித்தளம் கொண்ட கட்டமைப்பும், கதையையும், படைப்பாற்றலையும் பெரிதென நம்பும் தயாரிப்பாளர்களும் கூட்டணி சேர்ந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். தமிழ் திரையுலகில் ஆக்கப்பூர்வமானதொரு மறுமலர்ச்சி ஏற்படுமென ஆணித்தரமாக நான் நம்பினேன். இதன் மூலமாக கதை சொல்லும் உத்தியிலும், தொழில்நுட்பத்திலும் நாம் பல படிகள் முன்னேற இயலும். ஓடுகிற ஒவ்வொரு படங்களிலும் கதையே பிரதானமாக இருக்கும் நிலை வரும். தமிழ் திரையுலகில் ஏற்படப் போகும் இப்புதிய புரட்சியினை நாளை உலகமே அண்ணாந்து பார்க்கும்” - பிரமிப்புச் செய்தியினை கூட எளிமையாக பேசுகிறார் சாமிநாதன். இந்த எளிமையும் இவருக்குப் பலம்!

0 comments: