Friday, April 18, 2008

ரசிகனுக்கு மரியாதை! - குருவி கலர்புல் கேலரி!!


அது 2004ஆம் ஆண்டு. இதே போல கோடை விடுமுறை நேரம், கில்லி படம் வெளியாகியிருக்கிறது. அந்தப் படத்தைப் பார்த்த விஜய்யின் ரசிகர் ஒருவர் இதே போன்ற ஒரு படத்தை இதே காம்பினேஷனில் தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். விஜய்யை தொடர்பு கொண்டு தன் ஆசையை கூறுகிறார். சில வருடங்களுக்கு தன் கால்ஷீட் பிஸியாக இருப்பதால் வேறு ஒரு நடிகரை வைத்து படம் தயாரியுங்கள், சில காலம் கழித்து உங்கள் தயாரிப்பில் நடிக்கிறேன் என்று விஜய் சொல்கிறார்.

நான் படம் தயாரித்தால் உங்களை வைத்து தான் தயாரிப்பேன். உங்கள் கால்ஷீட் எனக்கு எப்போது கிடைக்கிறதோ அப்போது தயாரித்துக் கொள்கிறேன் என்கிறார் அந்த ரசிகர். இதோ நான்கு வருடங்கள் கழித்து அந்தப் படம் ரெடி!!! படத்தின் பெயர் “குருவி”. விஜய்யை வைத்து தான் முதன்முதலாக படம் தயாரிப்பேன் என்று சபதம் செய்தவர் உதயநிதி ஸ்டாலின். தன்னை ரசித்து தனக்காக மட்டுமே படம் தயாரிக்க வந்த தன்னுடைய ரசிகனுக்காக பரிசாக இரவு, பகல் பாராத உழைப்பை தந்திருக்கிறார் விஜய். தரணி - விஜய் - த்ரிஷா - வித்யாசாகர் காம்பினேஷன் ஒன்றே போதும், இது சூப்பர் டூப்பர் ஹிட் படமென வெளியீட்டுக்கு முன்பே சொல்லிவிடலாம்.

விஜய்யுடன், த்ரிஷா, சுமன், மாளவிகா, விவேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு, வித்யாசாகர் இசை. தரணி இயக்கும் இப்படத்தை ரெட் ஜயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் “குருவி” படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. யோகி பியுடன் இளைய தளபதி பாடியிருக்கும் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. படம் அடுத்த மாதம் வெளிவரலாம்.

















1 comments:

  1. said...

    சிம்ரன் சின்னத் திரை இணையத்தில் அல்லது சிடியில் கிடைக்குமா? வண்ணத்துப்பூச்சி இறுதி எபிசோட் மின்சாரத் தடை காரணமாக பார்க்கமுடியவில்லை. இணையத்தில் இருந்தால் எங்கே எடுக்கலாம் எனக்கூறுங்கள்? ஜெயா டிவி இந்த தொடரை மறுஒளிபரப்பு செய்யலாம்? ஐரோப்பிய அல்லது அமெரிக்க நேரத்தில் மறு ஒளிபரப்புச் செய்தால் நன்றாக இருக்கும்