Saturday, April 12, 2008

சென்னையில் ஒரு சொர்க்கம்.. குழந்தைகளுக்காக!


“ஆஹா! ஓஹோ! அங்கே என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?” என்று அடிக்கடி சிலாகித்த நண்பரிடம்...

“அப்படி என்ன இடம் அது? அங்கே என்னதான் இருக்கு?” எனக் கேட்டபோது, “நீங்களே வந்து பாருங்களேன்” என்றார்.

அலட்சியத்தோடு புறப்பட்ட நமக்கு, அடுத்த சில நிமிடங்களில் கிடைத்ததோ பரவசம்!

சென்னையிலிருந்து 12 கிலோ மீட்டரில் இருக்கிறது அந்த அழகிய நந்தவனம். மலை முகடு போன்ற நுழைவாயில். அதன் தலை முழுக்கப் புல் போர்வை. நடுவே பிரம்மாண்டமான கதவுகள். அதனுள்ளே அழகிய கட்டடங்கள். சீரான தார்ச்சாலைகள். நீருற்று. புல்வெளி. எங்கெங்கு திரும்பினாலும் கண்களுக்கு குளுமை.

“இது சினிமா ஸ்டுடியோவா?” என்றோம். புன்னகையோடு மறுத்தார் நண்பர்.

விசாலமான கூண்டுகள் வரிசையாக எதிர்ப்பட்டன. அதில் அழகழகான ஆஸ்திரேலியக் கிளிகள், சிட்டுக் குருவிகள், இங்கிலாந்து கோழிகள், ஆளுயர ஈமு பறவைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

“பறவைகள் சரணாலயமாக்கும்?” என்ற போதும் புன்னகை மட்டுமே நண்பரின் பதிலாக வர, பயணம் தொடர்ந்தது.

பளிங்கு போல எதிர்ப்பட்டது நீச்சல் குளம். அதன் முன்னே ஸ்கேட்டிங் மைதானம். அருகருகே டென்னிஸ் கோர்ட், வாலிபால் கோர்ட், பாஸ்கட்பால் கோர்ட், ஃபுட்பால் கிரவுண்ட், அத்லெடிக் ட்ராக், கிரிக்கெட் பிட்ச் என எல்லாமே சர்வதேசத் தரத்தில்! தவிர பக்காவான ஜிம், சலூன் கூட இருந்தது.

“இது கேம்ஸ் கிளப்தானே?” என்றோம் ஆச்சர்யத்தோடு. “ம்ஹூம்” என மறுத்த நண்பர் நம்மை அழைத்துச் சென்ற பாதையெங்கும் மூலிகைச் செடிகள், காய்கறித் தோட்டம்.

“இது விவசாயப் பண்ணை தானே?” என்றோம். “உங்கள் யூகங்கள் அத்தனையும் தவறு. இது ஒரு சர்வதேச உறைவிடப் பள்ளி” என்றார் நண்பர். பிரமிப்புடன் நின்ற நம்மை பள்ளிக்குள் அழைத்துப் போனார்.

வண்ண ஓவியங்களோடு வகுப்பறைகள், அழகழகான இருக்கைகள், முழுமையான வசதிகளுடன் லேப்கள், அரிய புத்தகங்களுடன் நூலகம், Wi Fi தொழில்நுட்பத்துடன் கூடிய லாங்வேஜ் லேப்... என ஒவ்வொன்றும் அதிசயிக்க வைத்தது.

அடுத்ததாக ஹாஸ்டல்... அறைக்கு மூன்று பேர் தங்கும் வசதி, தனித்தனி கட்டில், பீரோ, டேபிள், ஃபேன் வசதிகள்!

“யோகா, மெடிடேஷன், பரத நாட்டியம், குதிரைச்சவாரி, நீச்சல், இசை என சகலத்தையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறார்கள்” என்றார் நண்பர்.



“உள் விளையாட்டுகளுக்கான அறைகள், 24 மணி நேர மருத்துவ வசதி, நட்சத்திர ஓட்டல் போன்ற டைனிங் ஹால், திறந்தவெளி திரையரங்கம் என எல்லாமே அழகும் ரசனையும் மிளிரும்படி அமைந்திருக்கும் இந்த ‘ஸ்ரீ வித்யா அகாடமி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி'யை, ‘எ ஹோம் அவே ஃப்ரம் ஹோம்' எனவும் சொல்லலாம்” என்றார் நண்பர்.

கைகுலுக்கி வரவேற்றார் பிரின்சிபால் முத்து கிருஷ்ணன். குடியரசுத் தலைவர் விருது பெற்ற கல்வியாளராம். “கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம். எல்.கே.ஜி. முதல் ப்ளஸ் டூ வரை கற்பிக்கிறோம். தனிக்கவனம் செலுத்தும் நோக்கில் வகுப்புக்கு இருபது மாணவர்களை மட்டுமே அனுமதிக்கிறோம். படிப்பில் கவனம் செலுத்துவது போலவே மாணவர்களின் உடல் நலத்திலும் அதிக கவனம் செலுத்துகிறோம். அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள் நடத்தி ப்ராக்ரஸ் ரிப்போர்ட் போலவே ஹெல்த் ரிப்போர்ட் பராமரிக்கிறோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படைத்து விட்டால் போதும். யூனிஃபார்மில் ஆரம்பித்து புத்தகங்கள், ஷூ, நீச்சல் உடைகள், விளையாட்டு உபகரணங்கள் உள்பட சகலத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

பள்ளியில் அமைந்துள்ள ‘அஸ்ட்ரானமி கிளப்' மற்றும் வானிலை ஆய்வு மையம் போன்ற புதுமையான விஷயங்களை வியந்தபடியே வெளியே வந்த நம்மிடம் நண்பர் கேட்டார்.. “என்ன நான் சொன்னது சரிதானே? உங்க பசங்களை இங்கே கொண்டு வந்து சேர்க்கணும்னு தோணுதா?”

சிலிர்ப்புடன் சொன்னோம்... “கரெக்ட். கூடவே நானும் சின்னப் பையனா மாறி இதே ஸ்கூலில் சேரணும்னு ஆசையா இருக்கு!”

நீங்களும் ஒரு முறை வந்து பாருங்களேன்.. உங்களின் குழந்தைகளுக்கும் ஒரு புதிய உலகமே திறக்கலாம்.



முகவரி :
ஸ்ரீ வித்யா அகாடமி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் ஸ்கூல்,
சென்னை - 600 0072.
தொலைபேசி : 044-329114051, 32914052, 32914053
இணையதளம் : www.srividhyaacademy.com

0 comments: