Wednesday, April 9, 2008

பாரதிராஜாவின் தெற்கத்திப் பொண்ணு!


முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவில் காட்டப்படும் கிராமங்கள் சென்னையின் ஸ்டுடியோ செட்டிங்குகளில் அடங்கிக் கிடந்தது. தமிழ் சினிமாவை மண் மணக்கும் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவர் இயக்கிய பதினாறு வயதினிலே திரைப்படம் தமிழின் கிராமத் திரைப்படங்களுக்கு நிஜமான அச்சாணியாக இன்றுவரை விளங்குகிறது எனலாம்.

பெரிய திரையை கிராமங்களால் அலங்கரித்த பாரதிராஜா இப்போது சின்னத்திரை பக்கமும் தன் பார்வையை செலுத்தியிருக்கிறார். வரும் ஏப்ரல் பதினான்கு முதல் கலைஞர் டிவியில் பாரதிராஜா இயக்கும் “தெற்கத்திப் பொண்ணு” ஒளிபரப்பாகவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசைஞானி இயக்குனர் இமயத்தோடு இந்த நெடுந்தொடர் மூலமாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு.

முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் பாரதிராஜா. பெரிய திரையில் அவர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள் நெப்போலியன், ரஞ்சிதா இருவரும் தான் கதைக்களனின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த தொடரில் இடம்பெறப் போகும் ரேக்ளா ரேஸ் பெரும் பொருட்செலவில் சினிமாவுக்கு இணையாக படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

0 comments: