Tuesday, April 1, 2008

அயன் - சூர்யாவின் புதிய அவதாரம் - படங்கள்!

ஏவிஎம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் அயன். படத்தில் சூர்யாவின் கெட்டப் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எடையை குறைத்து தூம் அபிஷேக் பச்சன் போல செம ஸ்மார்ட்டான சூர்யா. ஒல்லியான சூர்யாவுக்கு ஒல்லியான தமன்னா தானே பொருத்தம்? அதனால் கதாநாயகியாக தமன்னா. இசை : ஹாரிஸ் ஜெயராஜ்.

அயன் என்ற சொல்லுக்கு தனித்துவமானவன் என்று பொருளுண்டாம். சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிரையும் அயன் என்று சொல்லலாமாம். படத்தின் ஸ்டில்களை கண்டால் காதல் படமென்று நினைப்பீர்கள். காமடியும், ஆக்சனும் காதலை மிஞ்சக்கூடிய அளவுக்கு இருக்குமாம். மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும்.







0 comments: