Friday, November 2, 2007

உலகளவில் தடம்பதிக்கும் பிரமிட் சாய்மீரா!

அமெரிக்காவைச் சேர்ந்த FunAsia நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலமாக அமெரிக்கச் சந்தையில் நுழையும் முதல் இந்திய தொடர் திரையரங்கு நிறுவனமாக பிரமிட் சாய்மீரா விளங்குகிறது.

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனம் (NSE: PSTL, BSE : 532791 and SGX : XS0306488890) இந்தியாவின் மிகப்பெரிய தொடர்திரையரங்கு நிறுவனமாக விளங்குகிறது. சர்வதேச சந்தையில் கால்பதிக்கும் முகமாக இந்நிறுவனம் அமெரிக்க நிறுவனமான FunAsia நிறுவனத்தை கையகப்படுத்தியிருக்கிறது. FunAsia அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சார்ந்தது. இதன்மூலமாக இனி அந்நிறுவனம் “பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் அமெரிக்கா Inc., ரிச்சர்ட்ஸன், டெக்சாஸ்” என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கும். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் 60 ஸ்க்ரீன்களை உருவாக்க பிரமிட் சாய்மீரா திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே பிரமிட் சாய்மீரா ஒரு திரையரங்கை கையகப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிகாகோ நகரின் ரேடியோ ட்ரைவ்-டைம் ஹவர்ஸ் மற்றும் ஹ¥ஸ்டன் நகரின் ரேடியோ டைமையும் தன்வசப்படுத்தியிருக்கிறது. பிரமிட் சாய்மீரா தியேட்டரின் இந்த அமெரிக்க நடவடிக்கைகளால் உலகளவில் 703 ஸ்க்ரீன்கள் கொண்ட மிகப்பெரிய தொடர்திரையரங்கு நிறுவனமாக அது மாறியிருக்கிறது.

பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் இந்த திடீர் அமெரிக்க படையெடுப்பால் உலக அளவில், குறிப்பாக இந்தியர்கள் / ஆசியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பிரமிட் சாய்மீரா குறிப்பிடத்தக்க வலுவான இடத்தை பிடித்திருக்கிறது. ஏற்கனவே மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் பிரமிட் சாய்மீரா வலுவாக காலூன்றியிருக்கிறது.

“புவியியல் தான் வரலாறு என்பார்கள். நாங்கள் அமெரிக்க மண்ணில் தடம் பதித்த இந்த வரலாறு குறித்து மகிழ்ச்சியடைகிறோம். அமெரிக்க மக்கள் தொகை கணக்கீட்டின் படி (2000ம் ஆண்டைய கணக்கீடு) தெற்கு ஆசிரியர்கள் அமெரிக்காவில் இருபத்தியொன்று இலட்சம் பேர் இருக்கிறார்கள். அமெரிக்காவின் 6வது பெரிய இனமாகவும், அதிக வருவாய் ஈட்டுபவர்களாகவும் விளங்குகிறார்கள் (64,000 டாலர் தனிநபர் வருமானம், நாட்டின் மொத்த தனிநபர் வருமானத்தை கணக்கிடும் போது 50 சதவிகிதம் அதிகம்). FunAsia நிறுவனத்தை கையகப்படுத்தி அமெரிக்க பொழுதுபோக்குத் துறையில் நாங்கள் நுழைய இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறோம். சினிமா மட்டுமேயன்றி நல்ல பொழுதுபோக்குச் சூழலை உருவாக்குவதே எங்கள் எண்ணம்” என்கிறார் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பி.எஸ். சுவாமிநாதன்

FunAsia நிறுவனமென்பது மொத்தமாக 4,765 இருக்கைகளை கொண்ட 17 ஸ்க்ரீன்களை உள்ளடக்கியது. பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் அமெரிக்கா, Inc நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் சிகாகோ காம்ப்ளக்ஸ் 1,763 இருக்கைகளை உள்ளடக்கிய 6 ஸ்க்ரீன்களை தன்னகத்தே கொண்டது. டெக்ஸாஸில் FunAsia நிறுவனம் வட அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பாகிஸ்தானியரகள், நேபாளிகள், பங்களாதேஷிகள் மற்றும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்று தெற்காசியர்களை குறிவைத்து செயல்படுகிறது. திரையரங்கு திரைப்பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் உணவகங்கள், கூட்ட அரங்குகள், ஊடகங்களின் மற்ற வடிவம் (எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட பிரிவினருக்கான வானொலி சேவை) போன்ற வடிவங்களில் அமெரிக்காவில் செயல்பட பிரமிட் சாய்மீரா நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிகாகோ, டெக்ஸாஸ் போன்ற இடங்களிலும், எங்கெல்லாம் விரிவடைகிறார்களோ, அங்கெல்லாம் FunAsia அரங்குகளில் வீடியோ பூத்துகளை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ பூத்துகள் மூலமாக தம்பதிகள் பல மைல் தூரத்தில் வசிக்கும் தங்கள் இணையுடன் பார்த்து, பேசிப் பழகிக்கொள்ள முடியும்.

டாக்டர் பரூக், ஜான் மற்றும் ஷாரிக் ஹமீது ஆகியோர் FunAsiaவின் நிறுவனர்கள். இனி இவர்கள் பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் அமெரிக்கா, Incயின் உயர்மட்ட ஆலோசகர்களாக இருப்பார்கள். அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் பலவகை பொழுதுபோக்குத் தளங்களுக்கு பிரமிட் சாய்மீராவை எடுத்துச் செல்ல இவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

இம்முயற்சிகளில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தடம்பதிக்க லண்டனின் Elara Capital Plc நிறுவனம் உதவியது.

0 comments: