Monday, November 12, 2007

ஜெகன்மோகிணி நமீதா!

பெண்ணென்றால் பேயும் இறங்கும் என்பது பழமொழி. அழகான மோகிணிப் பேயாக இருந்தால் மனமிறங்காத ஆடவரும் உண்டா? அதுவும் அந்த மோகிணிப் பேய் நமீதாவாக இருந்தால்... மோகிணிக்கு என்ன பிடிக்கும்? மல்லிகைப்பூவும், வனப்பான வாலிபர்களும் தானே? வாலிபர்களே தயாராகுங்கள்!

1978ஆம் ஆண்டு தெலுங்குப் படவுலகில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அப்போதைய சூப்பர்ஸ்டார்களான என்.டி.ராமாராவும், நாகேஸ்வர ராவும் இணைந்து ஒரு திரைப்படம் நடித்தார்கள். அப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்று பேசப்பட்டது. ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து இப்போது ஒரு படம் நடித்தால் எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ, அதே அளவு முக்கியத்துவம் அத்திரைப்படத்துக்கும் இருந்தது. அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற இயலவில்லை. காரணம்?

தென்னிந்திய திரையுலகின் மாயாஜால மன்னன் என்றழைக்கப்பட்ட விட்டலாச்சார்யா இயக்கிய ஜெகன்மோகிணி திரைப்படமும் அத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாளில் வெளியிடப்பட்டது. ஜெயமாலினி நடித்த ஜெகன்மோகிணி பெரும் வெற்றி பெற்றது. கதாநாயகனாக நரசிம்மராஜூ என்பவர் நடித்திருந்தார். விட்டலாச்சாரியா திரைப்படங்களில் நிரந்தர ட்ரேட்மார்க் கதாநாயகன் அவர். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையிட்ட திரையரங்கெல்லாம் திருவிழாக் கோலம் கண்டது. பார்த்தவர்களெல்லாம் பயந்தார்கள். இருப்பினும் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள்.

அடக்க ஒடுக்கமான மருமகளை மகனுக்கு தெரியாமல் கொலை செய்கிறார்கள். அந்த மருமகள் மோகிணிப் பேயாக மாறி தன் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார். அன்பான தன் கணவனுக்கு வேறொரு நல்ல மனைவியுடன் வாழ்க்கையை அமைத்து தருகிறார். மாமூலான கதை தான் என்றாலும் விட்டலாச்சாரியா பயன்படுத்திய கேமிரா வித்தைகளால் அப்படம் சிறப்பு பெற்றது. கிராபிக்ஸ் என்ற சொல்லே அறியப்படாத அந்த காலக்கட்டத்தில் மிக தத்ரூபமாக மாயாஜால காட்சிகளை விட்டலாச்சாரியா உருவாக்கியிருந்தார். பேய்கள் தலைகீழாக நடக்கும் காட்சிகளை படமாக்க அரங்குகளையே தலைகீழாக அமைத்து படமாக்கினார். அடுப்பில் விறகு கட்டைக்கு பதிலாக தன் கால்களை வைத்து ஜெகன்மோகிணி சமைக்கும் காட்சியை நாற்பது வயது கடந்தவர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இதோ மீண்டும் வரலாறு மீண்டும் திரும்புகிறது. பழைய படங்களை ரீமேக் செய்யும் கலாச்சாரம் ஜெகன்மோகிணியையும் விட்டுவைக்கவில்லை. மீண்டும் ஜெகன்மோகிணி என்.கே.விசுவநாதனால் இயக்கப்படப் போகிறது. மயக்கும் மோகிணி கதாபாத்திரத்தில் நடிக்க நமீதா ஒப்புக் கொண்டிருக்கிறார். கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பன்மடங்கு வளர்ந்திருக்கும் சூழலில் ஜெகன்மோகிணி ரசிகர்களை முன்பைவிட பன்மடங்கு பயமுறுத்துவார், அதே நேரத்தில் கிளுகிளுப்பும் ஊட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

7 comments:

 1. said...

  இப்பதிவை தமிழ்மணம் திரட்டியில் இணைக்கமுடியவில்லை. வாசிக்கும் வாசகர்கள் யாராவது இணைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

 2. Anonymous said...

  Now it can be viewed through thamizmanam :-)

  jahir

 3. said...

  Thank you Jahir!

 4. Anonymous said...

  நல்ல எழுத்தாளுமை. பிரமிட் சாய்மிராவுக்கும் நமிதா பிடிக்குமா? நமிதாவை வைத்து படமெடுக்கிறீர்களா?

 5. said...

  //நல்ல எழுத்தாளுமை. பிரமிட் சாய்மிராவுக்கும் நமிதா பிடிக்குமா? நமிதாவை வைத்து படமெடுக்கிறீர்களா?//

  சூப்பர் ஸ்டார் ரஜினியையும், நமீதாவையும் யாருக்கு தான் பிடிக்காது?

  தயாரிப்பிலிருக்கும் பிரமிட் சாய்மீரா படங்கள் எதுவிலும் நமீதா கதாநாயகி இல்லை. பிரமிட் சாய்மீரா வழங்கி தீபாவளிக்கு திரைக்கு வந்த அழகிய தமிழ்மகனில் நமீதா நடித்திருக்கிறார்.

 6. said...

  முன்பு ஜெகன்மோகினி படம் பார்த்துவிட்டு இரவில் செல்லவே பயந்தார்கள். நமிதா நடித்தால் இரவு வராதா என்று ஏங்குவார்கள்.
  :)
  இந்த இடுகை சூடாகிவிடும் !

 7. said...

  பிரமிட் சாய்மீரா நிறுவனத்தாருக்கு,

  இந்த வார நக்கீரனில் உங்கள் நிறுவனத்தை புகழ்ந்து எழுதி இருக்கிறார்கள். கொக்கரக்கோ பக்கத்தை திருப்புங்க அங்கே பார்க்கலாம்.

  வார்னர் ப்ரதர்ஸ் போல் பேரும் புகழும் அடைய வாழ்த்துக்கள் !