Thursday, November 15, 2007

சிவாஜி - தி பாஸ் சாதனைத் துளிகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ் கடந்த ஜூன் மாதம் வெளியாகி 150வது நாளை இந்த தீபாவளியில் கடந்திருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமன்றி இந்திய சினிமா வரலாற்றிலேயே இத்திரைப்படம் பல சாதனை மைல்கற்களை எட்டியிருக்கிறது. அதுகுறித்த ஒரு பார்வை :

O தமிழகம் முழுவதும் 235 தியேட்டர்களில் வெளியான சிவாஜி 102 தியேட்டர்களில் நூறுநாள் ஓடியது.

O சிவாஜி வெளியாகும் போது தமிழக முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமிதாப் பச்சன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் படத்தினை பார்க்க ஆவல் காட்டினர். அவர்களுக்காக தனித்தனியாக சிறப்புக்காட்சிகள் போட்டு காட்டப்பட்டது.

O இந்தியா சினிமா வரலாற்றிலேயே படம் வெளிவருவதற்கு முன்பாகவே முன்பதிவு மூலமாக அதிகமாக வசூலித்த சாதனை சிவாஜிக்கே உரியது. ரூ. இரண்டரை கோடி ரூபாய் முன்பதிவு மூலமாகவே வசூலானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

O சென்னை நகரில் மட்டுமே முதல் நான்கு நாட்களில் ரூ. ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் வசூலித்தது.

O தலைநகரம் புதுடெல்லியில் பி.வி.ஆர். சினிமாஸ் மல்டிபிளக்ஸ் அரங்கில் நான்கு ஸ்க்ரீன்களில் வெளியாகியது. அலைமோதிய கூட்டம் காரணமாக இரண்டாம் வாரத்தில் 12 ஸ்க்ரீன்களாக காட்சிகள் அதிகரிக்கப்பட்டது.

O சிவாஜி - தி பாஸ்க்கான விநியோகஸ்தர் பங்கு சத்யம் தியேட்டரில் மட்டும் ரூ. ஒரு கோடியே ஐம்பத்தி ஐந்து லட்சம் கிடைத்தது. ஒரே ஒரு தியேட்டரின் மூலமாக இவ்வளவு பெரிய தொகை வினியோகஸ்தருக்கு கிடைத்தது தமிழக தியேட்டர் வரலாற்றிலேயே முதன்முறை.

O புனே, பரோடா போன்ற நகரங்களில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை. அதுபோன்ற நகரங்களிலும் வெளியாகி அரங்கு நிறைந்து ஓடியது சிவாஜி.

O இதுவரை வெளிவந்த தென்னிந்திய திரைப்படங்களிலேயே மிக அதிக விலைக்கு சிவாஜி படத்தின் இந்தி டப்பிங் உரிமை விற்கப்பட்டிருக்கிறது.

O இந்தியா மொழித்திரைப்படம் ஒன்று மலேசியாவில் நூறு நாள் ஓடியது இதுவே முதன்முறை. மலேசியாவில் 56 ஸ்க்ரீன்களில் வெளியாகியது. இதுவரை மலேசிய வசூல் வரலாற்றில் முதல் நாள் வசூலாக 350,000 மலேசிய ரூபாய் வசூலானதே சாதனையாக இருந்தது. சிவாஜி அச்சாதனையை முறியடித்து முதல் நாளே 500,000 மலேசிய ரூபாய் வசூலித்தது.

O இங்கிலாந்து நாட்டிலும் சிவாஜி திரைப்படம் வசூலில் சாதனைகள் புரிந்தது. UK TOP 10 என்கிற மதிப்பீட்டில் இடம்பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் சிவாஜி.

O தென்னாப்பிரிக்க நாட்டில் வெளியிடப்பட்ட சிவாஜி அங்கும் தன் முத்திரையை பதித்தது. தென்னாப்பிரிக்க பாக்ஸ் ஆபிஸின் டாப் 10ல் இடம்பெற்ற முதல் திரைப்படம் சிவாஜி.

சிவாஜி - தி பாஸின் சாதனைகள் தொடரும்...

4 comments:

  1. Anonymous said...

    இவ்வளவு சாதனை நடந்து என்ன பலன்?

  2. Anonymous said...

    தமிழர்கள் உய்வடைந்தார்கள். தமிழகத்தில் வறுமை நீங்கியது. பால் ஆறாக ஓடியது

  3. said...

    ஜூனியர் விகடனில் நாக் ரவி, மற்றும் இன்னொரு வினியோகஸ்தர் இருவரும் சிவாஜி வெளியிட்டதால் தலா ஒரு கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்களே, சிவாஜி தி லாஸ் என்ற கட்டுரையில். எது உண்மை?

    எனக்கு தெரிந்து சென்னையில் சக்கைப்போடு தான் போட்டுள்ளது சிவாஜி.

  4. Anonymous said...

    எது எப்படி இருந்து என்ன பயன்?
    செல்வந்தர் மேலும் செல்வந்தராவதும்
    ஏழை உயிருள்ளவரை ஏழையாயிருப்பதும்
    இவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு விடுமா என்ன?

    -நடுநிலை ரசிகை-