Tuesday, November 20, 2007

நமீதா! - கட்டழகின் ரகசியம்!


தென்னிந்தியாவில் மையம் கொண்டு அவ்வப்போது தமிழகத்தை தாக்கும் அழகுப்புயலான நமீதா தன் கட்டழகுக்கான ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார். முன்பெல்லாம் தினமும் உடற்பயிற்சி செய்வாராம். சமீபகாலமாக தொடர்ந்து படப்பிடிப்புகளில் இரவு, பகல் பாராமல் பங்கெடுப்பதால் முறையான உடற்பயிற்சியை செய்ய இயலவில்லையாம்.

எனவே சிலகாலமாக நலம்விரும்பிகளின் யோசனைப்படி யோகா செய்கிறாராம். இதன்மூலமாக அவரது உடல் மட்டுமல்லாமல் மனமும் கட்டுக்குள் இருக்கிறதாம். முகம் முன்பை விட பொலிவு அடைந்திருக்கிறதாம்.

தீபாவளிக்கு வெளியான அழகிய தமிழ்மகன் தனக்கு திருப்தி அளித்ததாக சொன்னார் நமீதா. மிகக்குறுகிய காலத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி என் திறமையை நிரூபிப்பேன் என்றார்.

நமீதா - பேரைக் கேட்டாலே அதுருதில்லே?

0 comments: