Tuesday, November 27, 2007

பில்லா 2007 - Synopsis & Exclusive Gallery!


சூப்பர் ஸ்டார் நடித்து 1981ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படம் எந்த காலக்கட்டத்திலும் ரீமேக் செய்ய ஏற்ற திரைப்படம். வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக வெற்றிக்கொடி நாட்டிய சூப்பர் ஸ்டார் மீண்டும் வில்லத்தன கதாபாத்திரத்தில் பில்லாவாக நடித்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் பில்லா அஜித்குமாராக மறுஅவதாரம் எடுக்கிறார். சூப்பர்ஸ்டார் ஏற்ற பில்லா மற்றும் ராஜா இருவேடத்தில் அசத்தலாக உருமாறியிருக்கிறார் அஜித்குமார். ஸ்ரீப்ரியா நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவும், ப்ரவீணா நடித்த கதாபாத்திரத்தில் கனவுதேவதை நமீதாவும் தோன்றுகிறார்கள். இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் (பாலாஜி கதாபாத்திரம்) புதுப்பொலிவான தோற்றத்தில் இடம்பெறுகிறார். மேஜர் சுந்தரராஜன் ஏற்ற கதாபாத்திரத்துக்கு யாரென்று யூகிக்க முடிகிறதா? வேறு யார்? பிரகாஷ்ராஜே தான்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை அறிந்தும் அறியாமலும், பட்டியல் வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். இத்திரைப்படத்தை சூப்பர் ஸ்டாருக்கு அர்ப்பணிப்பதாக அஜித்குமாரும், விஷ்ணுவர்த்தனும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள். சுரேஷ்பாலாஜி தயாரிப்பில் உருவான திரைப்படத்தை நாடெங்கும் பிரமிட் சாய்மீரா சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று பெருமையுடன் திரையிடுகிறது. உச்சநட்சத்திரங்களான விஜய், அஜித் இருவரின் திரைப்படத்தையும் அடுத்தடுத்து பிரமிட் சாய்மீரா வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.


பில்லா ஒலித்தகடினை சூப்பர்ஸ்டார் வெளியிடுகிறார்.

பில்லா 2007 பற்றிய நமது முந்தைய பதிவுகள் :
அஜித் as பில்லா - கலர்புல் சீன்ஸ்!
மீண்டும் பில்லா!





































4 comments:

  1. said...

    தல அஜித் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  2. said...

    அக்காலக் கட்டத்தில் பில்லா எங்கள் நங்கநல்லூர் ரங்கா தியேட்டரில் வந்தது.
    அம்மாதிரியான ஒற்றுமை இப்போது சாத்தியம் இல்லை, ஏனெனில் ரங்கா தியேட்டரின் பெயர் வெற்றிவேல் என்று மாறிவிட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  3. said...

    தல படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  4. said...

    தல படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்