Friday, November 23, 2007

பூதத்துக்கு பேரழகி ஜோடி!

அயல்நாட்டவர்களுக்கு ஹாரிபாட்டர் கதை எப்படியோ, அதுபோல ஆசியர்களுக்கு அலாவுதீன் கதை. அரபுநாடுகளில் உருவாக்கப்பட்ட அலாவுதீனின் கதையை எத்தனைமுறை படித்தாலும், பார்த்தாலும் நம்மவர்களுக்கு திகட்டுவதில்லை. அலாவுதீன் கதையில் வரும் அற்புத விளக்கு உண்மையிலேயே இருக்கிறது என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள்.

தமிழில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் இணைந்து நடித்து அக்கதை 'அலாவுதீனும், அற்புத விளக்கும்' என்ற பெயரில் வெளியானது. அதற்கு முன்பாக அலாவுதீன் கதையை உல்டா அடித்து ஜாவர்சீத்தாராமன் பூதமாக நடித்த பட்டணத்தில் பூதம் தமிழில் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இப்போது இந்தி சினிமாவின் முறை.

*Morphed Still, not original.

'அலாவுதீன்' என்ற பெயரில் அதே கதையை படமாக்க இருக்கிறார்கள். அமிதாப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கதாநாயகனாக அல்ல, பூதமாக. ஒரிஜினல் கதையை அமிதாப்புக்காக நிறைய மாற்றங்கள் செய்து மசாலா தடவிக்கொண்டிருக்கிறார்களாம். இப்படத்தில் பூதத்துக்கு ஜோடியும் உண்டாம். படத்தின் டைட்டில் பாடலை அமிதாப்பே பாடப்போகிறார் என்பதால் பாலிவுட் பற்றிக்கொண்டு எரியப்போகிறது.

ஆப்பிரிக்க சிங்கம் போல பூதம் இருந்தால், அரபிக்குதிரை போல ஜோடி வேண்டாமா? உலகெல்லாம் அமிதாப் பூதத்துக்கு ஜோடி தேடியவர்கள் கடைசியாக இலங்கையில் கண்டெடுத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு இலங்கை அழகி பட்டம் வென்ற ஜாக்குலின் என்ற பேரழகி தான் அவர். பகுதிநேரப் பத்திரிகையாளரான ஜாக்குலினுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வமில்லை. இருப்பினும் அமிதாப்புக்காக ஒப்புக்கொண்டிருக்கிறார். சொந்தக்குரலில் பேசி நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கும் அவர் இதற்காக இந்தி கற்றுவருகிறாராம்.

ஜாக்குலின் இப்போது இலங்கையில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அம்மணியின் படங்களை பார்த்தால் அவரிடம் படிக்கும் பசங்களின் கதி 'அதோகதி' என்றே தெரிகிறது.


0 comments: