Thursday, November 29, 2007

குஷ்பூ - அடுத்த சர்ச்சை ரெடி!


பெண்குழந்தைகளுக்கு பள்ளியில் முறையான பாலியல் அறிவுக்கல்வி வழங்கவேண்டும் என்று முன்பு குஷ்பு கூறி அது சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்போது குஷ்புவை தேடி அடுத்த சர்ச்சை கச்சை கட்டி வந்திருக்கிறது.

கடந்த வாரம் இரா.பார்த்திபன் நடிக்கும் 'வல்லமை தாராயோ' படப்பூஜைக்கு குஷ்பு வந்திருந்தார். பூஜையின் போது முப்பெரும் தேவியர் கடவுளர் சிலைக்கு அருகில் குஷ்பு அமர்ந்திருந்தார். அப்போது அவரது காலில் செருப்பு இருந்தது. இந்தப் படம் ஒரு வாரப்பத்திரிகையில் வெளியிடப்பட, அதைப்பார்த்து டென்ஷனான ஒருவர் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

திரையுலகப் பிரமுகர் ஒருவரிடம் இதுகுறித்து கருத்து கேட்டபோது, "இப்படியெல்லாம் பார்த்தா நாங்க வேலையே செய்யமுடியாது சார். குஷ்பு என்னா கோயில் கருவறைக்குள்ளா செருப்பு மாட்டிக்கிட்டு வந்தார்? இந்த சிலைகள் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டதல்ல. ஆர்ட் டைரக்டரால் பூஜைக்காக செட்டப் செய்யப்பட்டது. சினிமாவுக்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆலயம் போலெல்லாம் செட்டிங் போடுகிறோம். அப்போது செருப்பு காலில்லாமல் வேலை செய்யமுடியுமா? வேலை செய்வதும் சாத்தியம் தானா? அதே நேரத்தில் மதவழிப்பாட்டுத் தலங்களில் படப்பிடிப்பு நடத்தும்போது மதநெறிகளுக்கு உட்பட்டு சினிமா தொழிலாளர்கள் நடந்துகொள்கிறோம்" என்றார்.

5 comments:

  1. RATHNESH said...

    "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தாண்டா" பாடலின் போது கோவிலுக்குள்ளும், வீரா படத்தின் ஒரு பாடலில் திருப்பதி சிலைக்கு முன்பாகவும் ரஜினி செருப்பு அணியலாம்.

    ஏற்கெனவே கோவில் கட்டிக் கும்பிடப்படும் ஒரு பெண் தெய்வம் செட்டிங் சாமி படத்துக்கு முன் செருப்பு அணியக் கூடாதா?

    குஷ்பூவால் வாழ்ந்தவர் பலபேர். இப்போது இந்த முகவரி இல்லாத மனிதருக்கும் ஓர் அறிமுகம் கிடைக்க இருக்கிறது. அவ்வளவு தான்.

  2. Victor Suresh said...

    நாற்பெருந்தேவியரும் மங்களகரமாகவே இருக்கிறார்கள். இதில் ஒரு தேவி மீது மட்டும் ஏன் காழ்ப்புணர்வோ? அவர்களுக்கு கோவில் கட்டி பூஜித்ததை மறந்து விட்டார்கள் போலும்.

  3. Anonymous said...

    ஏற்கெனவே கோவில் கட்டிக் கும்பிடப்படும் ஒரு பெண் தெய்வம் செட்டிங் சாமி படத்துக்கு முன் செருப்பு அணியக் கூடாதா?


    ஹி.ஹி.ஹி.ஹி.. நல்ல பாய்ண்ட்டு!!

  4. Anonymous said...

    " Eppadi than kandupudikirangalo "

  5. G.Ragavan said...

    கடவுள் இல்லாத இடத்துலதான் செருப்பு போடனும்னா....எவனும் செருப்பே போட முடியாது. முட்டாப்பயக.