Wednesday, November 14, 2007

பிரமிட் சாய்மீராவின் ஸ்டோரி பேங்க் ரெடி!

தமிழர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ள ஒரு சேதி. தமிழர்கள் உருவாக்கிய பிரமிட் சாய்மீரா நிறுவனம் அமெரிக்காவில் ஆறு திரையரங்குகளை கையகப்படுத்தியிருக்கிறது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என நாலு நாடுகளில் தியேட்டர்களை வாங்கி நடத்தி வரும் பிரமிட் சாய்மீரா திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கும் விதமாக சேட்டிலைட் மூலம் திரைப்படங்களை ஒரே நேரத்தில் வெளியிடும் புதிய தொழில்நுட்பத்தில் இறங்கியிருக்கிறது. இதற்காக நவீன கட்டமைப்புடன் கூடிய 50 மாதிரி திரையரங்குகளை நிர்மாணித்து வருகிறது.

ஹீரோக்களிடம் கதை சொல்ல அலைந்து, நொந்து நூலாகிவரும் இளைஞர்களுக்கு ஸ்டோரி பேங் ஒன்றை உருவாக்கப் போகிறார்கள். இங்கே கதை சொல்லி தேர்வாகிவிட்டால் அதைப் படமாக்கிவிடும் சாய்மீரா.

இதைவிட ஹைலைட்டான விஷயம்... ஹாலிவுட் படங்களில் தமிழ் நடிகர்களை நடிக்க வைக்கப் போகிறார்கள். பொழுதுபோக்குத் துறையில் உலகின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக பிரமிட் சாய்மீரா உருவாகியிருப்பது தமிழனுக்குப் பெருமைதான்.

"இவ்வளவு பெரிய வளர்ச்சியடைந்திருந்தாலும் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்களைத்தான் தயாரிப்போம், வெளியிடுவோம். எக்காரணம் கொண்டும் ஆபாசமான படங்களை அங்கீகரிக்க மாட்டோம்" என தங்களின் பாலிஸியைச் சொன்னார் 'பிரமிட்-சாய்மீரா' சாமிநாதன்.

அடி பின்றாங்கப்பா!

(நன்றி : நக்கீரன் 2007, நவ.14 இதழ்)

4 comments:

  1. said...

    ஐடியா, எல்லாம் தாறுமாறா இருக்கில்ல

  2. said...

    //தமிழர்கள் உருவாக்கிய பிரமிட் சாய்மீரா நிறுவனம் அமெரிக்காவில் ஆறு திரையரங்குகளை கையகப்படுத்தியிருக்கிறது.//

    எந்த ஊரில் எந்த தியேட்டர்ன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!!

  3. said...

    கேட்க சந்தோசமாத்தான் இருக்கு.கூடவே அடியேனின் இரண்டு வேண்டுகோள்கள்: 1.புதியவர்களுக்கு அதிக வாய்ப்புக் கொடுங்கள். 2.பேங்குக்கு கூடுதல் பாதுகாப்புக் கொடுங்கள்.தமிழ் சினிமா உலகில் கதைத்திருடர்கள் அதிகம் என்று கேள்விப்பட்டேன்

  4. said...

    //எந்த ஊரில் எந்த தியேட்டர்ன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!!//

    இந்த பதிவை பாருங்கள்!