Saturday, November 10, 2007

பிரமிட் தீபாவளி!

தீபாவளிக்கு முன்பாக பிரமிட் சாய்மீரா நிறுவனம் சினிமா பத்திரிகையாளர்களுக்காக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பு :

2005 தீபாவளி நேரத்தில் நாற்பது தியேட்டர்களோடு கணக்கை துவக்கிய பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம் இந்த தீபாவளி நேரத்தில் தமிழ்நாடு, ந்திரா, கேரளா, கர்நாடகம், மும்பை என்று தேசிய அளவில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவென்று சர்வதேச அளவில் மூன்று தீபாவளிகளில் 703 திரையரங்குகளாக வளர்ந்திருக்கிறது.

சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் முதல் பன்னாட்டு பொழுதுபோக்கு நிறுவனம் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட். திரையுலக முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் திருட்டு விசிடி பிரச்சினையை ஒழிக்க அதிநவீன தொழில் உத்தியான டிஜிட்டல் சினிமாவை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தார்.

இந்திய பொழுதுபோக்குத் துறையில் தவிர்க்க இயலாத இடத்தை பிடித்திருப்பது சினிமா. 2010ம் ண்டுவாக்கில் இந்திய சினிமா வர்த்தகம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிப் பிடித்துவிடும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அவற்றில் 60 சதவிகித வர்த்தகம் தென்னிந்திய சினிமாத்துறையால் கையாளப்படும் நிலை இருக்கிறது. இத்துறை, படங்கள் தயாரிப்பு, விநியோகம் மற்றும் திரையிடுதல் கிய முக்கிய மூன்று துணை துறைகளோடு இயங்குகிறது. இந்த மூன்று துறைகளிலும் முத்திரை பதித்திருப்பதே பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிட்டெடின் சிறப்பு. இத்துறை வருவாய்க்கு முக்கிய தாரமாக திரையிடுதல் இருப்பதால், இந்திய சினிமா தியேட்டர்களின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தும் முயற்சிகளில் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தார் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த FunAsia நிறுவனத்தை கையகப்படுத்தியதன் விளைவாக அமெரிக்க பொழுதுபோக்குச் சந்தையில் தடம் பதிக்கும் முதல் இந்திய தொடர் திரையரங்கு நிறுவனமாக பிரமிட் சாய்மீரா விளங்குகிறது. FunAsia நிறுவனமென்பது 4,765 இருக்கைகள் கொண்ட 17 திரைகளை உள்ளடக்கியது. பிரமிட் சாய்மீரா அங்கே கையகப்படுத்தியிருக்கும் சிகாகோ காம்ப்ளக்ஸ் 1,763 இருக்கைகளை கொண்ட 6 திரைகளை கொண்டது. இவைமட்டுமல்லாமல் சிகாகோ நகரின் ரேடியோ ட்ரைவ் டைம் ஹவர்ஸ் ஹ¥ஸ்டன் நகரின் ரேடியோ டைமையும் தன்வசப்படுத்தியிருக்கிறது இந்த நிறுவனம். இந்த நடவடிக்கைகளால் உலகளவில் 703 திரைகள், கூட்டங்கள் நடத்த 3 விசால அரங்குகள், 3 ரேடியோ மற்றும் ஒரு பத்திரிகை கொண்ட மிகப்பெரிய தொடர்திரையரங்கு நிறுவனமாக பிரமிட் சாய்மீரா உருவெடுத்திருக்கிறது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் அமெரிக்கா Inc மூலமாக அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் புதியதாக 60 திரைகளை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

வண்ணத்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தன் முத்திரையை பதிக்க பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாராகிவிட்டது. கலைஞர் தொலைக்காட்சியில் ரேகா, ஐ.பி.எஸ்., பாவாணனின் திருமகள், சிறுவர் ரசித்துப் பார்க்க மழலைப்பட்டாளம் போன்ற நெடுந்தொடர்களை பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. சின்னத்திரையிலும் பலதரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து எல்லாம் இந்திய மண்டல மொழிகளிலும் தயாரித்து வழங்கிட பிரமிட் சாய்மீரா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்டின் கிளை நிறுவனங்கள் :
• பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் லிமிடெட்
• பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் லிட். சிங்கப்பூர்
• பிரமிட் சாய்மீரா தியேட்டர் செயின் மலேசியா
• பிரமிட் சாய்மீரா எண்டெர்டெயிண்மெண்ட் அமெரிக்கா Inc.
• சாய்மீரா ரியாலிட்டி பிரைவேட் லிட்

தமிழில் தயாரிப்பிலிருக்கும் மாதவன் நடிக்கும் வாழ்த்துக்கள், சுந்தர் சி நடிக்கும் யுதம் செய்வோம், பாலாவின் நான் கடவுள் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பு பணியில் இப்போது பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

இந்த தீபாவளி பிரமிட் சாய்மீராவின் சரவெடி தீபாவளி. பர்ஸ்ட் காப்பி முறையில் இளையதளபதி விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ திரைப்படத்தின் நெகட்டிவ் உரிமையை வாங்கி தமிழ் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்குகிறார்கள். சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படத்தை சென்னை மாநகரில் வெளியிடுகிறார்கள். சத்யராஜ், பிருத்திவிராஜ் நடித்த ‘கண்ணாமூச்சி ஏனடா’ திரைப்படத்தின் தயாரிப்பிலும் பங்குகொண்டு தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள். தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தை சேலத்தில் வெளியிடுகிறார்கள். ஷாருக்கான் நடித்த இந்திப்படமான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தினையும் தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார்கள்.

தீபாவளிக்கு வெளியாகும் ஜீவன் நடித்த மச்சக்காரன் திரைப்படம் பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவன குழுமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. ஒரே நிறுவனம் மிகப்பெரிய படங்களை அதிக அளவில், பலமொழிகளில் ஒரேநாளில் வெளியிடுவது திரையுலக வரலாற்றில் இதுவே முதன்முறை.

பிரமிட் சாய்மீராவின் இமாலய வளர்ச்சியில் பத்திரிகை நண்பர்களுக்கும் பங்குண்டு. எதிர்காலத்தில் இந்நிறுவனம் அடையப்போகும் இலக்குகளுக்கும், செய்யப்போகும் சாதனைகளுக்கும் பத்திரிகை நண்பர்களின் தொடர்ந்த பங்களிப்பினை இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. பிரமிட் சாய்மீரா குழுமம் சார்பில் பத்திரிகை அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

0 comments: