காக்கி, பகத்சிங் படங்களை இயக்கிய ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ஹல்லா போல் (Halla bol) திரைப்படத்தை மிக விரைவில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் வெளியிட இருக்கிறது. பெரும் வெற்றி பெற்றிருக்கும் ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தை தென்னிந்தியாவில் வெளியிட்டதின் தொடர்ச்சியாக பாலிவுட் திரைப்பட வணிகத்தில் பிரமிட் சாய்மீரா ஆர்வம் காட்டிவருகிறது.Halla bol என்பதற்கு "தாக்கு" (Attack) என்பது பொருள். சிறுநகரம் ஒன்றில் வளரும் இளைஞன் ஒருவன் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக விரும்புகிறான். கிடைக்கும் வாய்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளும் அவனுக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கடுமையான உழைப்புக்கு பின்னர் சினிமாவிலும் நடிக்கிறான்.
மிகக்குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றபின்னர், தன்னுடைய இயல்பான வாழ்க்கை முறையை இமேஜுக்காக அவன் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னை சுற்றியிருப்பவர்களும் தன் இமேஜுக்கு ஏற்றதுபோல நடிப்பதை உணருகிறான். நடிப்பே வாழ்க்கையாக மாறிவிட்ட அவலத்தை உணர்ந்தவன் வாழ்க்கையை வாழ ஏங்குகிறான்.இப்படிப்பட்ட வித்தியாசமான கதையமைப்பில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யாபாலன். இத்திரைப்படத்தில் கரினாகபூர், ஜாக்கி ஷெராப், போனிகபூர், ஸ்ரீதேவி போன்ற நட்சத்திரங்கள் 11 பேர் நடித்திருப்பது பாலிவுட்டை பரபரப்பாக்கியிருக்கிறது.
வரும் டிசம்பர் மாதம் இத்திரைப்படம் பிரமிட் சாய்மீராவால் வெளியிடப்படுகிறது.
Tuesday, November 13, 2007
ஹல்லா போல்
Posted by PYRAMID SAIMIRA at 11/13/2007 12:48:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
பாஸூ 'ஹல்லா போல்'னா 'உரக்கச் சொல்', சத்தமா முழங்குங்கற பொருள்ல வரும். நீங்க சொன்ன மாதிரி அட்டாக் இல்லை. கேட்டுட்டு எழுதுங்கப்பா.