ரொம்ப நாட்களாக ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த அர்ஜூன் மருதமலை சூப்பர் ஹிட் ஆனதால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிட்டு மீண்டும் தெம்போடு துரைக்காக ரெடியாகிவிட்டார். ரொம்ப சுமாரான கதையாக இருந்தாலும் சரியான விகிதத்தில் மசாலா தடவி சூப்பர் ஹிட் படங்களை தரும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இந்தமுறை அர்ஜூனோடு கைகோர்க்கிறார். பி.எல். தேனப்பன் தயாரிக்கிறார்.மருதமலையின் வெற்றிகரமான காமெடி பார்ட்னர்ஷிப் இப்படத்திலும் தொடர்கிறது. மீண்டும் அர்ஜூனோடு மல்லுக்கட்டப் போகிறவர் வடிவேலு. கவர்ச்சி வேடங்களே எனக்கு கிடைப்பதில்லை என்று ஆதங்கப்பட்டு வந்த பத்மபிரியாவுக்கு கவர்ச்சி காட்ட இந்தப்படத்தில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
இசையமைப்பாளர் இமான் இசையில் அக்னிநட்சத்திரத்தில் இடம்பெற்ற "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" பாடல் இப்படத்துக்காக ரீமிக்ஸ் (இடையிடையே ஆங்கில வார்த்தைகள் சேர்க்கப்படும். வேறென்ன?) செய்யப்படுகிறது. இப்பாடலின் படப்பிடிப்போடு தொடங்கப்பட்ட துரை தமிழ்ப்புத்தாண்டுக்கு திரைக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
Friday, November 30, 2007
மசாலாவுக்கு துரை கேரண்டி!
Posted by PYRAMID SAIMIRA at 11/30/2007 10:40:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment