அழகிய தமிழ் மகனின் வெளியீட்டை அடுத்து சூட்டோடு சூடாக குருவியில் நடிக்க ஆரம்பித்து விட்டார் இளைய தளபதி விஜய். உதயநிதியால் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தை இயக்குகிறார் தரணி. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் என்று தன் முந்தைய வெற்றிப்படமான கில்லி டீமோடு அதே சக்ஸஸ் பார்முலாவோடு களமிறங்கியிருக்கிறாராம் தரணி.தென்னிந்திய திரையுலகில் தன்னம்பிக்கையின் சின்னமாக தரணி பார்க்கப்படுகிறார். முதல் படம் படுதோல்வி, அதன்பின்னர் எதிர்பாராத சாலை விபத்து போன்ற இடர்ப்பாடுகளை தாண்டி அடுத்தடுத்து மூன்று மெகா ஹிட் ஆக்ஷன் மசாலா படங்களை வழங்கியவர் என்பதால் அவர் இயக்கும் படங்களுக்கு எப்போதுமே எதிர்ப்பார்ப்பு அதிகம்.
ஏ.வி.எம்மில் போடப்பட்ட பிரம்மாண்டமான 'பார்' செட்டிங்கில் ஒரு பாடல்காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். தூள் திரைப்படத்தில் 'மதுரைவீரன் தாண்டி' என்று பாடல்காட்சியிலேயே க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியை அமைத்திருந்த அதே உத்தியில் ஒரு உக்கிரமான சண்டையோடு கூடிய பாடல்காட்சியை அந்த அரங்கில் சுட்டுத் தள்ளியிருக்கிறாராம் தரணி.
தமிழ்ப்புத்தாண்டுக்கு மசாலா தடவப்பட்ட சுவையான 'குருவியை' எதிர்பார்க்கலாம்.
Monday, November 26, 2007
அடுத்த 'கில்லி' ரெடி!!!
Posted by PYRAMID SAIMIRA at 11/26/2007 11:25:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment