Saturday, February 2, 2008

ஆங்கிலப் படத்தில் நமீதா!!

ஐஸ்வர்யா ராய், ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து நமீதாவும் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘மாயா' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் தனது முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொணரும் என்று நம்புகிறார் நமீதா.

எரிக்மேனிங் என்பவரால் இயக்கப்படும் இந்தப் படத்தினை அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ”கதை இந்தியச் சூழலில் நடப்பதாக காட்டப்படுவதால் எந்த மொழி வித்தியாசத்தையும் என்னால் உணரமுடியவில்லை. நடிக்க வந்த கொஞ்ச நாளிலேயே இதுபோல ஆங்கில படவாய்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடித்த மற்ற படங்களைப் போலில்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று சொல்கிறார் நமீதா.

படத்தின் ஸ்டில்களை காணும்போது ஹாலிவுட் படத்துக்கு நிகரான கவர்ச்சி காட்சிகள் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருமாம்.







2 comments:

  1. Anonymous said...

    ///முழு நடிப்புத் திறமையையும் ///

    மெய்யாலுமா ?????

  2. said...

    பலான படம் போல இருக்கு.. ஆங்கில படத்துல நமீதான்னு சீனு வேறயா..?