மரணத்துக்கு பின் என்ன என்ற கேள்விக்கு விடை காணமுடியாதவர்களே மறுஜென்மம் குறித்து அதிகமாக சிந்திக்க தலைப்படுகிறார்கள் என்பது உளவியலாளர்கள் கருத்து. மறுஜென்மம் குறித்த சிந்தனைகளோடு வெளிவரும் படங்கள் தற்கால இந்தியச்சூழலில் அதிகம். மலையாளத்தில் மணிசித்திரதாழாக வெளிவந்து கன்னடத்தில் ஆப்தமித்ரா, தமிழில் சாதனை படைத்த சந்திரமுகி, சென்ற தீபாவளிக்கு வெளிவந்து உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஓம்சாந்தி ஓம் முதல் பல உதாரணங்களை காட்டலாம்.
அதே வரிசையில் அடுத்து வரவிருப்பது ‘வைத்தீஸ்வரன் கோயில்'. மறுஜென்மம் குறித்து ஆராயும் இத்திரைப்படத்தில் சந்திரமுகியில் சூப்பர் ஸ்டார் ஏற்ற உளவியல் மருத்துவர் பாத்திரத்தையே சரத்குமாரும் இப்படத்தில் ஏற்கிறார். நாடிஜோதிடத்துக்கு பெயர்போன கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோயில் இப்படத்தில் பிரதான இடம் பிடிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதும் அங்கே தான். சாயாஜி ஷிண்டே, சந்தானம் போன்ற பலரும் இடம்பெறும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வித்யாதரன் இயக்குகிறார்.
அண்ணாமலை பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் நாட ிஜோதிடம், மறுபிறப்பு என்று கதை அமைக்கப்பட்டிருப்பதால் கண்ணுக்கு விருந்தாக காட்சி அமைப்புகள் இருக்காதோ என்று நினைக்கவேண்டாம். இருக்கவே இருக்கிறார் கதாநாயகி மேக்னா நாயுடு. மறுஜென்மம் குறித்து ஆராய வரும் சரத்குமாரை ஆராய்வதற்காக வரும் பத்திரிகையாளர் வேடமாம் அவருக்கு. படத்தின் ஸ்டில்களை பார்க்கும் போது மேக்னா நாயுடுக்காகவே படத்தை பலமுறை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று தெரியவருகிறது.
Wednesday, February 6, 2008
சரத்குமாருக்கு ஒரு சந்திரமுகி!
Posted by PYRAMID SAIMIRA at 2/06/2008 05:01:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
வருங்கால முதல்வர் சரத் வாழ்க!