தமிழ் சினிமாவுக்கு இது யதார்த்த படங்களின் ட்ரெண்டு போலிருக்கிறது. இயல்பான முகங்களோடு கூடிய கதாபாத்திரங்கள், மிகைப்படுத்தப்படாத திரைக்கதை, கதையோடு ஒட்டிய பாடல்கள் என திரைப்படங்கள் நிறைய வரத்தொடங்கியிருக்கிறது.
வெயில் திரைப்படத்தின் பரவலான கவனிப்புக்கு பிறகு அங்காடித் தெரு படத்தை இயக்குகிறார் வசந்தபாலன். ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் புதுமுகம் மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கல்லூரி அகிலுக்கு பிறகு திரைக்கு கதாநாயகனாக வரும் ஒரு இயல்பான முகம். கற்றது தமிழ் படத்தில் நம் அடுத்த வீட்டுப் பெண் போல ரொம்பவும் யதார்த்தமாக நடித்த அஞ்சலி அங்காடித் தெருவுக்கு கதாநாயகி ஆகியிருக்கிறார்.
நாம் வசிக்கும் மண், பார்க்கும் மனிதர்கள் - இவர்களை தத்ரூபமாக திரைக்கு கொண்டு வருவது தான் வசந்தபாலனின் ஸ்பெஷாலிட்டி. அங்காடித்தெருவிலும் நம்மை ஏமாற்ற மாட்டார் என்று நம்புவோம்.
Thursday, February 14, 2008
வசந்தபாலனின் அங்காடி(த்) தெரு!
Posted by PYRAMID SAIMIRA at 2/14/2008 03:12:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment