சில காலம் முன்பு ஷாருக்கானின் வாழ்க்கை 'கிங் கான்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டிருந்ததை அறிந்திருப்பீர்கள். அதுபோலவே இப்போது நமது சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறும் புத்தகமாக வெளிவரப் போகிறது. கிங் கான் புத்தகத்தை எழுதிய டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்தே இப்புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்புத்தகம் வெளிவரப்போகிறது. ஆங்கிலத்தில் The name is Rajinikanth என்ற பெயரிலும், தமிழில் ‘ரஜினி - பேரைக் கேட்டாலே அதுருதுல்லே' என்ற பெயரிலும் வெளிவர இருக்கிறது. ஓம் சக்தி இண்டர்நேஷனல் என்ற பதிப்பகம் இப்புத்தகத்தை பதிப்பிக்கிறது.
புத்தகத்தின் முன்னுரையை தமிழக முதல்வர் கலைஞர் எழுதியிருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய தோழரான கமலஹாசன் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். மார்ச் 1ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்புத்தகத்தை வெளியிட இருப்பது அமிதாப் பச்சன். சூப்பர் ஸ்டார் ரசிகர்களே! இன்னொரு கொண்டாட்டத்துக்கு தயாராக இருங்கள்.
Wednesday, February 6, 2008
'ரஜினி' - பேரை கேட்டாலே அதுருதுல்லே!!
Posted by PYRAMID SAIMIRA at 2/06/2008 02:36:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment