Saturday, February 9, 2008

நான் கடவுள்! - பகீர் க்ளைமேக்ஸ்



பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வேகமாக வளர்ந்துவரும் நான் கடவுள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவின் வித்தியாச கெட்டப்போடு சில ஸ்டில்கள் வெளிவந்ததோடு சரி. படம் குறித்த தகவல்கள் ரகசியமாக பொத்தி பாதுகாக்கப்படுகிறது. படத்தின் இறுதிக்காட்சி இதுவரை இந்தியத் திரைப்படங்களில் வெளிவராத அளவுக்கு ‘பகீர்' முடிவோடு இருக்குமாம்.

காதலியோடு இணைய இனி சாத்தியமில்லாத நிலையில் தனக்குள் தன் காதலியையும், காதலையும் காதலன் மிருகத்தனமாக உள்வாங்கிக் கொள்வதே படத்தின் இறுதிக்காட்சி. அது எடுக்கப்பட்டிருக்கும் விதம் ரசிகர்களை மட்டுமல்லாமல் எல்லோரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்கிறார்கள்.

8 comments:

  1. said...

    பார்க்கலாம்.... இடையில் இன்னும் எத்தனை முறை கதாநாயகன், நாயகியை மாற்றப் போகிறார் என்று?? படம் எப்போ வரும் என்று கடவுளுக்கும் - படத்தின் தயாரிப்பாளராக நீங்கள் இருந்தால் உங்களுக்கும் - மட்டுமே தெரியும்

  2. Anonymous said...

    காதலியைக் கொன்று பிணத்தைத் தின்பது ஒரு கிளைமாக்ஸ்..

    இன்னோரு டைப் கிளைமாக்ஸை, பாலா தனது சொந்த செலவில் எடுத்துள்ளதாகவும் சொல்கிறார்களே..?

    இதில் எது உண்மை..?

  3. Anonymous said...

    இது பிரமிட் சாய்மீராவின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இல்லை என்றாலும், இது போல் ஒரு நிறுவனம் தொடர்புடைய வலைப்பதிவில் இன்னொரு நிறுவனம் விநியோகிக்கக்கூடிய திரைப்படம் குறித்த ஆதாரமற்ற தகவல்களைத் தருவது முறையா?

  4. said...

    //இது போல் ஒரு நிறுவனம் தொடர்புடைய வலைப்பதிவில் இன்னொரு நிறுவனம் விநியோகிக்கக்கூடிய திரைப்படம் குறித்த ஆதாரமற்ற தகவல்களைத் தருவது முறையா?//

    இப்படத்தின் தயாரிப்பில் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் பங்குண்டு. இது எங்கள் படம்!

    திரைப்படத்துறை குறித்த உங்களது அக்கறைக்கு நன்றி நண்பரே!

  5. Anonymous said...

    இப்படத்தின் தயாரிப்பில் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் பங்குண்டு. இது எங்கள் படம்

    :(

    எதற்கும் ஜெயமோகனை ஒரு வார்த்தைக் கேட்டு விடுங்கள். அவர் கேள்வி கேட்டால் தன் இணைய தளத்தில் உடனே பதில் சொல்கிறார்.
    பதில் புரியாவிட்டால் நான் பொறுப்பில்லை :).
    ”காதலியைக் கொன்று பிணத்தைத் தின்பது ஒரு கிளைமாக்ஸ்”
    ஜாக்கிரதை அது ஆண்டி-கிளைமாக்ஸ்,
    உண்மையான கிளைமாக்ஸை படம்
    வெளியாகும் முந்தைய நாள் படபிடிப்பு செய்வதாக பாலா திட்ட
    மிட்டிருக்கிறார் :).

  6. Anonymous said...

    //காதலியோடு இணைய இனி சாத்தியமில்லாத நிலையில் தனக்குள் தன் காதலியையும், காதலையும் காதலன் மிருகத்தனமாக உள்வாங்கிக் கொள்வதே படத்தின் இறுதிக்காட்சி.//
    //காதலியைக் கொன்று பிணத்தைத் தின்பது ஒரு கிளைமாக்ஸ்//

    காதலியை தின்றால் காதலும் காதலியும் கழிவுப்பொருளாகத் தானே ஆவார்கள்? :-)

    எப்படியெல்லாம் யோசிக்கிறார்களாப்பா?

  7. Anonymous said...

    நான் கடவுளை நீங்கள் தான் வினியோகிக்கிறீர்கள் என்று அறிய மகிழ்ச்சி.

    இது போன்ற செய்திகளை நீங்கள் வெளியிடுவது உங்கள் படங்களுக்கான விளம்பரத்துக்காக வேண்டி கூட இருக்கலாம்.

    ஆனால், கோடிக்கணக்கான பணத்தில் இயங்கும் நிறுவனம் ஏன் அதிகாரப்பூர்வமற்ற தளத்தில் இருந்து கிசுகிசுச் செய்திகளை எழுதுகிறது என்று புரியவில்லை.

    நீங்கள் ஏன் உங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத்தளத்தில் இருந்து வலைப்பதிவு நிறுவி இயங்கக்கூடாது? அப்போது ஒரு நிறுவனத்துக்குரிய பொறுப்புகளை உங்கள் பதிவில் எதிர்ப்பார்க்க இயலும். ஒரு வேளை அந்தப் பொறுப்புகளை விலக்கி எழுத இந்த ப்ளாகர் பதிவு உதவலாம். ஆனால், நாளையே இன்னொருவரும் ஒரு போட்டிப் பதிவோ போலிப் பதிவோ தொடங்கி தங்கள் நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பது போல் எழுதுவது எளிது. இது போன்றவற்றைத் தடுக்கவேனும் அதிகாரப்பூர்வத் தளத்தில் இருந்து எழுதக் கேட்டுக் கொள்கிறேன்.

  8. said...

    //நீங்கள் ஏன் உங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத்தளத்தில் இருந்து வலைப்பதிவு நிறுவி இயங்கக்கூடாது?//

    இது அதிகாரப்பூர்வத் தளம் இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது?

    எங்களது அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் இந்த வலைப்பூவுக்கான தொடுப்பு இருக்கிறது.

    மேலும் நாங்கள் கிசுகிசு பாணியில் எதுவும் எழுதுவதில்லை என்பதையும் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

    உண்மையில் நான் கடவுள் படத்தை நாங்கள் வினியோகிப்பதாக சொல்லவில்லை, தயாரிப்பில் எங்களுக்கும் பங்குண்டு என்றே சொல்லியிருக்கிறோம்.