Wednesday, February 13, 2008

நமீதாவின் டிரெஸ் கோட் இனிமேல் சல்வார் கமீஸ்?


சினிமாவில் மட்டுமன்றி பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் வஞ்சனையில்லாமல் உடை அணிவதில் புகழ்பெற்றவர் நமீதா. கலைஞர் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' என்ற நடனநிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் நடுவராக பங்குபெறும் நமீதா போட்டியாளர்களை விட சிக்கன உடையில் நிகழ்ச்சிக்கு வந்து பலபேரின் ஞாயிற்றுக்கிழமை இரவு உறக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் சிவாஜி படத்தின் 175வது நாள் நிகழ்ச்சி நடந்தபோது விழாவுக்கு படப்பிடிப்பு உடையிலேயே வந்திருந்து விருது பெற்று பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் ஸ்ரேயா.

இந்த இரு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி கடந்த மாத தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அனல்பறக்கும் விவாதம் நடந்தது. ஸ்ரேயாவையும், நமீதாவையும் கண்டிக்கும் விதத்தில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள்.

இதைத் தொடர்ந்து இனி பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது முழுக்க போர்த்திய உடைகளை 'தாலிபான்' பாணியில் அணியப் போகிறேன். சிவாஜி விழாவில் கவர்ச்சி உடையில் கலந்துகொண்டது வேண்டுமென்றே செய்ததல்ல, யதேச்சையாக நடந்தது, அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று ஸ்ரேயா அறிக்கை விட்டிருந்தார்.

நமீதா இதுபோல அறிக்கையெல்லாம் கொடுக்கவில்லை. தான் இனிமேல் எந்தமாதிரி உடையணியப் போகிறேன் என்பதை செயலில் காட்டியிருக்கிறார். கடந்த வார ‘மானாட மயிலாட' நிகழ்ச்சியில் சல்வார் கமீஸ் உடையில் வந்து அசத்தினார் நமீதா. இனிமேல் இந்நிகழ்ச்சியில் மிடி, ஷார்ட் ஸ்கர்ட் அணியப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்து கலக்குவாராம்.

நமீதாவின் இந்த திடீர் முடிவால் சில பேர் மகிழ்ச்சியடைந்தாலும், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக ‘இந்திர விழா' படத்தில் பிகினி உடையில் தோன்ற முடிவெடுத்திருக்கிறார் நமீதா.

1 comments:

  1. Anonymous said...

    Good post :-))))))