Monday, February 11, 2008

ஸ்ரேயா - ஜில்லா ‘ஜில்' ஸ்டில்ஸ்!

கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் தீவுக்கிராமம் கிருஷ்ணாலங்கா. வெளியுலகில் இருந்து இந்த தீவுக்கு செல்ல படகுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். போக்குவரத்துத் தொடர்பு இல்லாததால் அத்தீவில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். மருத்துவவசதி இல்லாமல் மாண்டுபோனவர்கள் நிறைய. இந்நிலையில் அத்தீவுக்கு பலகோடி மதிப்பீட்டில் ஒரு பாலம் அமைத்தால் தான் மக்களால் வெளியுலகோடு தொடர்புகொள்ளமுடியும் என்று அத்தீவின் தலைவர் நினைக்கிறார்.

ஐ.ஏ.எஸ். படித்து ஆட்சிப்பணியில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை கிராமத்துக்கு அழைத்துச் சென்று நிலைமையை விளக்குகிறார் தலைவர். அரசிடம் பேசி நிச்சயம் பாலம் அமைத்து தருகிறேன் என்று உறுதி கூறுகிறார் ஐ.ஏ.எஸ். நண்பர். இருபதாண்டு காலத்துக்கு மேலாகியும் உறுதி நிறைவேற்றப்படவில்லை.

எனவே தலைவர் தன்னுடைய மகனை கிராமத்தினர் சார்பாக மாநிலத் தலைநகருக்கு அனுப்புகிறார். 'தூள்' படத்தின் கதை சாயலில் இருக்கிறதா? இந்தப் படம் தான் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற பாகிரதி படத்தின் கதை. தலைவரின் மகன் வேடத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரவிதேஜா, கதாநாயகி ஸ்ரேயா. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இத்திரைப்படம் ‘ஜில்லா' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த கதையில் ஸ்ரேயாவுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? ஒருவேளை கீழ்க்கண்ட ஸ்டில்களைப் பார்த்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம்!











0 comments: