Saturday, February 23, 2008

குறும்பட தயாரிப்புக்கான பயிற்சிப் பட்டறை

சிறுநகரங்களில் வசிக்கும், திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு திரைப்படம் குறித்த தொழில்நுட்ப அறிவினை உருவாக்குவதற்காக குறும்பட பயிற்சிப் பட்டறை ஒன்றினை நிழல் திரைப்பட இயக்கமும், பதியம் திரைப்பட இயக்கமும் இணைந்து நடத்துகின்றன.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் போன்ற துறைகளின் நுணுக்கங்கள் கற்றுத்தரப்படும். மார்ச் 10 முதல் 16 வரை ராமநாதபுரத்தில் இந்த பட்டறை நடக்கும். யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

நாடறிந்த இயக்குனர்களான அமீர், ஜெகன்னாதன், பாலாஜிசக்திவேல் போன்றவர்கள் இப்பட்டறையில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். பிரபல இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு இப்பட்டறையில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

3 comments:

  1. தருமி said...

    மதுரையில் எப்போதாவது நடத்தும் உத்தேசம் உண்டா?

  2. PYRAMID SAIMIRA said...

    இந்த பட்டறையை நாங்கள் நடத்தவில்லை. நிழல் திரைப்பட இயக்கம் மற்றும் பதியம் திரைப்பட இயக்கம் மாவட்டம் தோறும் நடத்திவருகிறார்கள். மதுரையில் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

  3. Nilofer Anbarasu said...

    I hope this is a great opportunity to young budding film talents. Thanks to the entire team who is working on this program. It would be great if they conduct similar programs in all other major cities.