அடுத்த ஜனாதிபதி யாரென்று அமெரிக்காவில் பரபரப்பாக விவாதிக்கப்படும் நேரத்தில், தமிழ்நாட்டிலோ புரட்சித் தளபதி விஷாலின் காதலி யாரென்ற விவாதம் கிளம்பியிருக்கிறது.
ஒரு வார இதழின் காதலர் தின சிறப்பிதழில் தான் ஒரு நடிகையை ஒருதலையாக காதலிப்பதாகவும், தன் காதலை அவரிடம் சொல்ல தயக்கமாக இருப்பதாகவும் விஷால் பேட்டி அளித்திருந்தார். அந்த நடிகை யாரென்று ஆளாளுக்கு ஒரு யூகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
செல்லமே, திமிரு என்று அடுத்தடுத்த படங்களில் ரீமாசென்னுடன் ஜோடி சேர்ந்தவர் விஷால். இந்த ஜோடி 'ஜாடிக்கேத்த மூடி' மாதிரி ‘சிக்'கென்று இருந்ததால் ரீமாசென்னும், விஷாலும் காதலிக்கிறார்கள் என்றொரு வதந்தி உலவியது. இந்த வதந்திக்குப் பிறகு விஷாலும், ரீமாசென்னும் இணைந்து நடிக்கவில்லையென்பதால் வதந்தி நீர்த்துப் போனது. விஷால் ஒருதலையாக காதலிப்பதாக சொல்லியிருக்கும் நிலையில் மீண்டும் தூசு தட்டி இந்த வதந்தி எடுக்கப்பட்டு ‘ஒருவேளை ரீமாவை தான் விஷால் காதலிக்கிறாரோ?' என்றொரு ஐயம் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
விஷால் நடித்து கடைசியாக வெளிவந்த மலைக்கோட்டை திரைப்படத்தில் விஷாலுக்கும், 'முத்தழகு' ப்ரியாமணிக்கும் கெமிஸ்ட்ரி செமத்தியாக ஒர்க்-அவுட் ஆனது. எனவே ப்ரியாமணியை தான் விஷால் காதலிக்கிறார் என்று நிறைய பேர் பெட் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாலை நாளிதழ் இதை உறுதி செய்து எட்டு கால செய்தியும் வெளியிட்டிருக்கிறது.
தற்போது விஷால், நயன்தாராவுடன் 'சத்யம்' படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் ஒருவேளை நயன்தாராவை காதலிக்கிறாரோ? என்று யூகத்திலும் பத்திரிகைகளில் செய்தி தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த சஸ்பென்ஸை உடைக்கக் கூடியவர் விஷால் ஒருவர் மட்டும் தான். ரீமா, ப்ரியாமணி, நயன்தாரா இந்த மூவருக்கும் கூட விஷால் யாரை காதலிக்கிறார் என்பது தெரியாது. இந்த காதலர் தினத்தன்று தன் காதலை விஷால் வெளிப்படுத்தப் போகிறார் என்றொரு தகவல் வேகமாக கசிந்து வருகிறது. விஷாலே வெளிப்படையாகச் சொன்னபின்னர் தான் அவரது காதலி யாரென்று தெரியவரும். விஷாலின் அண்ணன் அஜய்யும் நடிகை ஸ்ரேயா ரெட்டியை காதலித்து மணந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, February 11, 2008
விஷால் யாரை காதலிக்கிறார்?
Posted by PYRAMID SAIMIRA at 2/11/2008 12:38:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
ப்ரியாமணி 'நான் இல்லை.. எனக்குத் தெரியாது.. என்கிட்ட புரொபஸல் லெட்டர் இன்னும் வரலை'ன்னு சொல்லிட்டாங்க..
ரீமாசென் இப்ப நடிக்கலை.. அதுனால இருக்காதுன்னு சொல்லலாம்.
கடைசியா மச்சக்கன்னி நயன்தாரா..
போட்டோ லுக்க பார்த்தாலே இதுதான்னு நினைக்கத் தோணுது.. ஆனா அம்மணி 'அக்கட ஒரு கால்.. இக்கட ஒரு கால்'ன்னுல இருக்கு..
லெட்டரை அஸெப்ட் பண்ணுமான்றது தெரியல.. சந்தேகந்தான்..
எனக்கும் ஒரு சந்தேகம்..
//விஷாலின் அண்ணன் அஜய்யும் நடிகை ஸ்ரேயா ரெட்டியை காதலித்து மணந்தவர்//
கல்யாணம் முடிஞ்சிருச்சா..? எப்போ..?