வார்னர் பிரதர்ஸ் உருவாக்கும் படங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது சினிமா ரசிகர்களின் கருத்து. அதனால் தான் வார்னர் பிரதர்ஸ் சமீபத்தில் உருவாக்கிய 10,000 B.C. படத்துக்கு உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இண்டிபெண்டன்ஸ் டே, டே ஆப்டர் டுமாரோ படங்களை இயக்கிய ரோலண்ட் எம்மிரிச் இயக்குகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு இருமடங்காக இருந்தது.
பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வாரம் வெளியான திரைப்படம் குறைந்தபட்சமாக 50 மில்லியன் டாலர்களையாவது முதல் வாரத்தில் வசூலிக்கும் என்று தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்தார்கள். எனினும் திரைப்படம் முதல் வார முடிவில் 35.7 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்திருக்கிறது.
இதுவும் சொல்லிக் கொள்ளக்கூடிய வசூல் தான் என்றாலும் சென்ற ஆண்டு இதே நேரத்தில் வெளியான ”300” திரைப்படம் முதல் வாரத்தில் 71 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை புரிந்திருந்தது. ”300” திரைப்படத்தின் சாதனையில் பாதியை தான் 10,000 B.C. திரைப்படத்தால் எட்ட முடிந்தது என்பது ஒருவகையில் ஏமாற்றமே. ஆயினும் அமெரிக்கா தவிர்த்த இதர உலக நாடுகளில் 10,000 B.C.யின் முதல்வார வசூல் “300” படத்துக்கு நிகராக இருப்பது ஒரு ஆறுதல்.
இப்படம் மகளிரை கவரத் தயங்கியிருப்பது போல தெரிகிறது. இதுவரை படம் பார்த்தவர்களில் 61 சதவிகிதம் பேர் ஆண்கள். அதுபோலவே படம் பார்த்தவர்களில் பெரும்பான்மையானோர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இப்படத்துக்கான விமர்சனங்கள் எதிர்மறையாகவே பொதுவாக அமைந்திருப்பது படத்தின் ஓட்டத்துக்கு வேகத்தடை போட்டிருக்கிறது. படத்தின் கதை நடப்பதாக சொல்லப்படும் காலக்கட்டத்திற்கும், படத்தில் சித்தரிக்கப்பட்ட சம்பவங்களையும் ஒப்பிட்டு “லாஜிக்” இடிக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.
இதுவரை வந்த விமர்சனங்களில் எட்டு சதவிகித விமர்சகர்கள் மட்டுமே ”படம் பார்க்கலாம்” என்ற ரீதியில் விமர்சித்திருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களுக்கான விமர்சனங்களில் ‘மெட்டாகிரிட்டிக்' இணையத்தளத்தின் விமர்சனத்தை மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். நம்மூர் ஆனந்த விகடன் விமர்சனத்துக்கு இணையாக ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் அந்த மெட்டாகிரிட்டிக் விமர்சனங்களை மதிக்கிறார்கள். அந்த இணையத்தளம் இப்படத்துக்கு நூற்றுக்கு முப்பத்தேழு மதிப்பெண்களை மட்டுமே தந்திருக்கிறது.
ஒருவேளை படத்துக்கு 5,000 B.C. என்று பெயரிட்டிருந்தால் 'லாஜிக் ஓட்டை' என்று சொல்லும் விமர்சகர்களின் வாயை அடைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படியான ஹாலிவுட் படங்கள் எதுவும் சமீபத்தில் வெளியாகாததாலும், இன்னும் சில நாட்களுக்கு வெளியாகப் போவதில்லை என்பதாலும் 10,000 B.C. வசூல்ரீதியாக தப்பித்து ஓடிவிடும் என்று கருதுகிறார்கள்.
Monday, March 10, 2008
10,000 B.C. வெற்றிப் படமா?
Posted by PYRAMID SAIMIRA at 3/10/2008 01:36:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
Metacritic ai vida rooten tomatoes aiye americargal peridhum virumbugirargal
இந்த படத்தை தமிழில் பார்த்தேன். டப்பிங் தான் மோசமோ என்று நினைத்தால் ஒரிஜினல் படமும் மோசம் என்று தெரிகிறது. ஒரு சில பிரம்மாண்ட காட்சிகள் தவிர்த்து படம் அறுவை. மனிதன் பேச கற்றுகொண்ட காலம் அது தான் என்று வரலாற்றில் படித்திருக்கிறேன். இந்த படத்திலோ எல்லாரும் பேசிகொண்டே இருக்கிறார்கள்.
மணிவாசகன் (திருச்சி)
இல்லை!