Monday, March 3, 2008

பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் தாய் காவியம்! - ஸ்டில்ஸ்!!

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “தாய் காவியம்”. மாக்ஸிம் கார்க்கி என்பவர் எழுதிய ருஷ்ய நாவலான ”தி மதர்” தமிழில் முதல்வர் கலைஞரால் “தாய் காவியம்” என்ற பெயரில் தழுவி எழுதப்பட்டது. அதே கதை இப்போது படமாக்கப்படுகிறது. நாவலின் நாயகன் பாவெல் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார்.

கலைஞர் வெள்ளித்திரை சார்பாக தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தை பாலி ஸ்ரீரங்கம் இயக்குகிறார். வாலியின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். ருஷ்ய நாவலை இந்திய, தமிழக சூழலுக்கு பொருந்துமாறு மாற்றி படமெடுத்திருக்கிறார்கள். பாடல்காட்சிகள் அயல்நாடுகளில் படமாக்கப்பட்டிருக்கிறது.








0 comments: