உப்பு ஷோபன சலபதி ராவ் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நடிகர் ஷோபன்பாபு இன்று மரணமடைந்தார். அவரது வயது 71. நான்கு முறை ஃப்லிம் பேர் விருதும், ஐந்து முறை நந்தி விருதும் மற்றும் ஏராளமான விருதுகளும் பெற்ற தலைசிறந்த நடிகர் அவர். 30 ஆண்டுகளில் அதிக விருதுகள் பெற்ற ஆந்திராவின் ஒரே நடிகர் அவர் தான்.
1965ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தெலுங்கு படங்களில் கதாநாயகனாக 1997 வரை நடித்துக் கொண்டிருந்தார். என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற ஜாம்பவான்கள் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட ஷோபன்பாபுவுக்கு என்று ரசிகர்களும், ரசிகைகளும் ஆந்திராவில் அதிகளவில் இருந்தார்கள்.
ஷோபன்பாபு படங்களில் மிதமான மேக்கப்பில் மிக அழகாக உடையணிவார். ஸ்டைலிஷ் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு ஆந்திர ரசிகர்களால் வழங்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே திரையில் டி-ஷர்ட் எனப்படும் உடையணிந்து நடித்தவர் அவர்.
இவரது திடீர் மறைவால் தெலுங்குத் திரையுலகம் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்திருக்கிறது.
Thursday, March 20, 2008
நடிகர் ஷோபன்பாபு மரணம்!
Posted by PYRAMID SAIMIRA at 3/20/2008 12:27:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment