Wednesday, March 5, 2008

பாரதிராஜாவின் பொம்மலாட்டம்!

”என் இனிய தமிழ்மக்களே!” என்ற கரகரப்பு குரலுடன் தொடங்கும் படம் என்றாலே வறண்ட அல்லது பசுமையான கிராமங்கள், அதீத கோபமும், பாசமும் நிறைந்த மனிதர்கள், வெள்ளந்தியாக சிரிக்கும் பொக்கை கிழவி, மழை, ஆறு, மலை, மரம், வெள்ளையுடை தேவதைகள் இதெல்லாம் தானே நமக்கு நினைவுக்கு வரும். தமிழக கிராமங்களை அச்சு அசலாக மணம் மாறாமல் திரைக்கு கொண்டு வந்த சாதனைக்கு சொந்தக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

‘கண்களால் கைது செய்' திரைப்படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு பொம்மலாட்டத்தை இயக்கி வருகிறார். பொம்மலாட்டம் எந்த மாதிரியான படம் என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை. பொம்மலாட்டம் மூலமாக வெற்றிகரமாக பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் காலடி பதிக்க திட்டமிட்டிருக்கிறார் பாரதிராஜா. இப்படம் தெலுங்கில் ”காளிதாஸ்” என்ற பெயரிலும், இந்தியில் “சினிமா” என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் வெளிவரப் போகிறது.

ஆக்சன் கிங் அர்ஜூனுடன், பிரபல இந்தி நடிகர் நானாபடேகர் இணைந்து நடிக்கிறார். அர்ஜூனுக்கு இப்படம் இந்தியில் அறிமுகம் என்பது போல, நானாபடேகருக்கு தமிழில் இதுதான் அறிமுகம். தசாவதாரம் படத்துக்கு இசையமைக்கும் ஹிமேஷ் ரேஷமைய்யா இசையமைத்த முதல் தமிழ்படம் பொம்மலாட்டம். பழனியில் நடித்த காஜல் அகர்வால் மற்றும் ருக்மிணி விஜயகுமார் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

”பொம்மலாட்டம் - சினிமாவைப் பற்றிய ஒரு சினிமா”









1 comments:

  1. said...

    ஏன் சார், இந்த படத்துல ஹீரோவே இல்லிங்களா? பொண்ணுங்க மட்டும் நடிக்கிறா படம்ங்களா?