மறுபடியும் ஒரு பத்திரிகையாளர் இயக்குனர் ஆகிறார். மாலைமுரசு பத்திரிகையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சினிமாப் பகுதியின் எடிட்டராக இருந்த ஆதிராஜன் “சிலந்தி” படத்தின் மூலமாக இயக்குனர் ஆகிறார்.
”ஜி” கம்பெனி சார்பாக பி.சங்கர் இப்படத்தை தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணிபுரிந்த நீல்முகர்ஜி இப்படம் மூலம் இசையமைப்பாளர் ஆகிறார். மித்ரா மை ப்ரண்ட், இவன், உயிர், விசில் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பவுசியா பாத்திமா இப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
மலையாளத்தின் முன்னணியில் இருக்கும் கதாநாயகன் முன்னா இப்படம் மூலமாக தமிழுக்கு வருகிறார். அழகி படத்தில் குட்டி நந்திதா தாசாக நடித்து, இம்சை அரசனில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்ற மோனிகா இப்படத்தின் கதாநாயகி.
பொதுவாக எல்லாப் படங்களிலுமே காதலர்கள் காதலில் விழுவதும், அதன் பின்னர் பல போராட்டங்களுக்கு பின்னர் இணைவதிலும் கதை முடியும். மாறாக இப்படம் ஆரம்பிக்கும் போதே திருமணத்தில் ஆரம்பித்து, திருமணத்துக்கு பின்னர் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்பாராத திருப்பங்களோடு சொல்லுமாம். மோனிகாவின் ஸ்டில்ஸ்களை உற்றுப் பாருங்கள், கழுத்தில் தாலி தெரிகிறதா?
Wednesday, March 12, 2008
”சிலந்தி” வலை விரிக்கும் மோனிகா!
Posted by PYRAMID SAIMIRA at 3/12/2008 03:12:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
//மோனிகாவின் ஸ்டில்ஸ்களை உற்றுப் பாருங்கள், கழுத்தில் தாலி தெரிகிறதா?//
யப்பா.. ரொம்பத்தான் சாமி .........................
கடைசி படம் சூப்பர். உற்று பார்த்தால் கூட தாலி தெரியவில்லை. நான் விடபோவதில்லை. தாலி தெரியும் வரை உற்று பார்த்துக்கிட்டே இருக்க போறேன்.
indha ponnaiyum urichitaangala..
No hero one that movie? We need more interesting stills from this movie
Hi,
Look at this site, by typing in tamil can able to search in google.
http://www.yanthram.com/ta