Wednesday, March 12, 2008

SMS (Siவா Maனசுலே Saக்தி)

1940களின் இறுதியில் தொடங்கி கால் நூற்றாண்டுக்கு தமிழ் திரையுலகில் கோலோச்சிய நிறுவனம் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஜெமினி பிக்சர்ஸ். எஸ்.எஸ்.வாசன் அவர்களது மறைவுக்கு பிறகு சில ஆண்டுகள் மட்டுமே படத்தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனம் அதன் பின்னர் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

இப்போது மீண்டும் தனது தந்தை, பாட்டனார் வழியில் படமெடுக்க வருகிறார் பா.சீனிவாசன். விகடன் டாக்கீஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் அவரது நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் SMS. அதாவது ”சிவா மனசுல சக்தி”

ராம், டிஷ்யூம், ஈ, கற்றது தமிழ் என்று வரிசையாக கெட்டப்புக்களில் வூடு கட்டி விளையாடிய ஜீவா தான் படத்தின் கதாநாயகன். ”இந்த படத்தில் கெட்டப்பில் என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டால் “என் ஒரிஜினல் கெட்டப்பில் வருகிறேன், அது தான் ஸ்பெஷல்!” என்று சொல்லி சிரிக்கிறார் ஜீவா. அதிகாலை பனியில் நனைந்த ரோஜா மாதிரி ஹீரோயின் அனுயா. புனே திரைப்படக் கல்லூரி மாணவியாம். ஊர்வசி, சந்தானம் என்று படத்தில் இடம்பெறும் நட்சத்திரப் பட்டியல் நீளுகிறது.

யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குனர் ராஜேஷ். ”படத்துலே என்னங்க மெசேஜ் சொல்லப் போறீங்க?” என்றால் “எஸ்.எம்.எஸ்.னாலே மெசேஜ் தானே? அதுவும் இந்தப் படம் ‘ஸ்வீட் மெசேஜ் சர்வீஸ்' ஆக இருக்கும்” என்கிறார் இயக்குனர்.








0 comments: