தென்னிந்தியாவில் Mr. Perfectionist என்று கமல்ஹாசனை சொல்வது போல, வட இந்தியாவில் அமீர்கானை சொல்கிறார்கள். தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்வது அமீரின் இயல்பு.
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி சூர்யா நடித்த கஜினி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். அதே ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா வேடத்தில் அமீர். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
கஜினி திரைப்படத்தில் சூர்யாவுக்கு மொட்டை அடித்தது போன்ற ஒரு ஸ்பெஷல் விக் தயார் செய்யப்பட்டிருந்தது. தலையில் பலத்த அடி பட்டு தையல் போடப்பட்டிருந்தது போன்ற மேக்கப்பும் போடப்பட்டிருந்தது. அமீர் இந்த கெட்டப்பை எப்படி செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த வாரம் விழா ஒன்றில் கலந்துகொண்ட அமீர்கான் கஜினி மொட்டை கெட்டப்பில் வந்து கலக்கினார். விக் பயன்படுத்தாமல் தனது உண்மையான சிகை அலங்காரத்தையே கதாபாத்திரத்துக்கு ஏற்றவகையில் மாற்றியிருக்கிறார். சிகையலங்கார நிபுணருக்கு இதற்காக ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டதாம்.
ஒரிஜினலை விட க்ளைமேக்ஸ் ரீமேக்கில் மாறுபட்டு இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்கிறார்கள். பார்ப்போம்!
Tuesday, March 25, 2008
கஜினிக்காக அமீர்கான் போட்ட மொட்டை - படங்கள்!!
Posted by PYRAMID SAIMIRA at 3/25/2008 12:42:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment