தரணியின் இயக்கத்தில் குருவி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். குருவிக்கு பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பேரரசு அல்லது ஹரி இயக்கலாம் என்று தெரிகிறது.
ஏ.வி.எம்.மின் படத்துக்கு பிறகு ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க திட்டமிட்டிருக்கிறார்.
பிரபுதேவா படம் முடிந்ததுமே தனது மனம் கவர்ந்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைய இருக்கிறார். படத்துக்கு “ஆண்டவன்” என்ற கெத்தான டைட்டிலை பிடித்திருக்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகரான விஜய் அடுத்தடுத்து ஓய்வில்லாமல் படங்களை ஒப்புக் கொள்வது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Tuesday, March 4, 2008
ஆண்டவன் ஆகிறார் இளைய தளபதி!
Posted by PYRAMID SAIMIRA at 3/04/2008 04:59:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment