Wednesday, March 5, 2008

சிம்புவின் சிலம்பாட்டம்!!

லஷ்மி மூவி மேக்கர்ஸோடு இணைந்து பிரமிட் சாய்மீரா தயாரித்து வரும் புதிய திரைப்படம் சிலம்பாட்டம். வில்லன்களோடு சிலம்பாட்டம் ஆடப்போவது லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. பொல்லாதவனில் வில்லனாக நடித்த கிஷோர், ஓரம்போ படத்தில் வில்லனாக நடித்த ஜான் விஜய் என்று சிம்புவுக்கு இரட்டை வில்லன்கள் சவால் விடப்போகிறார்கள்.

கும்பகோணத்தில் தொடங்கும் கதை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடி திருநெல்வேலியில் முடியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளரான சரவணன் இப்படம் மூலமாக இயக்கத்துக்கு வருகிறார். ஒளிப்பதிவு செய்ய இருப்பது 'வெயில்' மதி. மும்பை மாடல்களான ஷானாகான், ஜானு இருவரும் கதாநாயகிகள். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு என கலகல செட்டும் உண்டு.








1 comments:

  1. said...

    படம் எப்படி காளை மாதிரி பரபரப்பா இருக்குமா? பரபரப்பா ஓடுமா? க்ளைமாக்ஸ்ல சிம்பு சிலம்பம் சண்டை போட்டு வில்லனை கொல்ல போறார் தானே?