Monday, March 24, 2008

பில்லா 2007 - ரீமேக் கலாச்சாரத்தில் ஒரு சகாப்தம்!!


சூப்பர் ஸ்டார் நடித்த பில்லா படம் அஜித்குமார் நடிக்க விஷ்ணுவர்த்தனால் ரீமேக் செய்யப்படுகிறது என்ற செய்தி வந்தபோது ‘பழைய பில்லா போல வருமா?' என்று பலருக்கு சந்தேகம். அவர்களது சந்தேகங்களை தவிடுபொடியாக்கி கடந்த டிசம்பர் மாதம் வெளியான பில்லா நூறு நாட்களை கடந்து இன்னமும் வசூல் மழை பொழிந்தவாறு இருக்கிறது.

அஜித்குமாரின் ஸ்டைலான நடிப்பு, விஷ்ணுவர்த்தனின் மிரட்டலான இயக்கம், யுவன்ஷங்கர் ராஜாவின் கலக்கல் இசை, நீரவ்ஷாவின் நுணுக்கமான ஒளிப்பதிவு, நயன்தாரா - நமீதா கூட்டணியின் அதிரடி கவர்ச்சி என்று படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. படம் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே தமிழகத்தில் சுமார் பதினான்கு லட்சம் பேர் பில்லா திரைப்படத்தை கண்டு களித்தார்கள்.


தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா என்று அண்டைய மாநிலங்களிலும் தமிழிலேயே வெளியாகி சக்கைபோடு போட்டது. இந்தியா மட்டுமல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா என்று தமிழர்கள் வாழும் சர்வதேச நாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. UK TOP 10 என்ற தரவரிசையில் மற்ற ஐரோப்பிய, ஹாலிவுட் திரைப்படங்களுடன் பில்லா படமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெளியான தியேட்டர்களில் நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பில்லா திரைப்படம், ஷிப்டிங் முறையில் B மற்றும் C செண்டர் தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி அங்கும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஒரு பழைய படத்தை ரீமேக் செய்யும்போது எத்தகைய தொழில்நுட்ப நுணுக்கங்களை பயன்படுத்தலாம், எப்படியெல்லாம் பழைய படத்திலிருந்து மாறுபடுத்தி காட்டமுடியும் என்பதற்கு பில்லா ஒரு நல்ல முன்னுதாரணம்.

2 comments:

  1. Anonymous said...

    //இங்கிலாந்து, அமெரிக்கா என்று தமிழர்கள் வாழும் சர்வதேச நாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. UK TOP 10 என்ற தரவரிசையில் மற்ற ஐரோப்பிய, ஹாலிவுட் திரைப்படங்களுடன் பில்லா படமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.//

    This is the joke of the year.

  2. said...

    தல போல வருமா...? தல போல வருமா...?

    பில்லா காட்சியமைப்பில் இருக்கும் நளினமும் அழகும் சூப்பர்.