Thursday, March 20, 2008

பிரமிட் சாய்மீராவின் “சிர்ஃப்” - இக்கரைக்கு அக்கரை பச்சை!!


இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் பழமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, திருமண வாழ்க்கைக்கு சரியாக பொருந்தும். அடுத்தவர் வாழ்க்கையை நாம் உற்று நோக்கும்போது அது இனிமையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் நம் கண்களுக்கு தெரியும். நம் வாழ்க்கை மட்டுமே நமக்கு கசப்பு! அடுத்தவனுக்கோ அவனது வாழ்க்கை கசப்பாகவும் நம் வாழ்க்கை இனிமையானதாகவும் தெரியும். இதுதான் மனிதப் பார்வைகளின் இயல்பு!


நம்பிக்கைக்கு இடமில்லாத அன்பு, பொருளாதாரத் தேவைகளின் பால் ஏற்படும் அன்பு, புரிந்துணர்வு அறவே இல்லாத அன்பு - இப்படிப்பட்ட அன்பு கறிக்குதவாத ஏட்டுச்சுரைக்காய் மாதிரி. அன்பு என்பதற்கு என்ன வரையறை? எப்படிப்பட்ட அன்பு ஒருவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும், திருப்தியான குடும்பத்தையும் அமைக்கும் என்பது குறித்த விவாதங்களை எழுப்புகிறது “சிர்ஃப்” திரைப்படம்.


தத்தம் வாழ்க்கையில் மகிழ்ச்சி கொள்ளாது, அடுத்தவரின் வாழ்க்கை மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறதே? என்று ஏங்கும் நான்கு ஜோடிகளின் இளமை கலாட்டா தான் இந்த திரைப்படம். மெட்ரோபாலிட்டன் நகரங்களில் வசிக்கும் உயர் நடுத்தரவர்க்க தம்பதிகளுக்குள் எழும் பிரச்சினைகளை இளமை குறையாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் ரஜதீஷ்நாயர். இவர் ராஜ்குமார் சந்தோஷியுடன் பணிபுரிந்தவர். நடிகை மனிஷா கொய்ராலா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இத்திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


ஏப்ரல் நான்காம் தேதி இத்திரைப்படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் வெளியிடுகிறது. இளம் தம்பதிகளும், திருமணமாகப் போகும் இளையதலைமுறையினரும் கட்டாயம் காணவேண்டிய திரைப்பாடம் “சிர்ஃப்”

0 comments: