Friday, March 21, 2008

தாமதமாகிறது தசாவதாரம்?


”இப்போ வருமோ? எப்போ வருமோ?” என்று ஏங்கவைத்து விட்டது தசாவதாரம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பத்து வேடத்தில் நடித்து கமல்ஹாசன் சாதனை புரிந்திருக்கும் தசாவதாரம் படத்தில் ஆடியோ ரிலீஸ் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரியிலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டிய ஆடியோ மார்ச்சுக்கு ஒத்திவைக்கப்பட்டு, அதன் பின்னர் ஏப்ரல் இரண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதுவும் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது. ஆடியோ வெளியீடு தள்ளிப்போவதால் படவெளியீடும் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்படலாம்.

இவ்வளவு ஒத்திவைப்புக்கும் தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. இந்தியாவிலேயே இதுவரை எந்தப் படத்தின் ஆடியோ வெளியீடும் வெளியிடப்படாத அளவுக்கு பிரம்மாண்ட வெளியீடாக தசாவதாரப் படத்தின் ஆடியோ வெளியீடை நடத்த திட்டமிட்டிருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஆடியோ வெளியீட்டுடன், படத்தின் ட்ரைலரையும் வெளியிடப்போகிறார்கள். ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், மோகன்லால், உபேந்திரா, சிரஞ்சீவி ஆகிய ஜாம்பவான்கள் விழாவில் பங்கேற்கப்போவதால் விழா தாமதமாகிறது என்று தகவல்.

0 comments: