Friday, December 14, 2007

ஆஸ்கர் விருது - நமக்கு எப்போ கிடைக்கும்?

ஆஸ்கர் விருது என்பது ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் ஆங்கிலத் திரைப்படங்களுக்கு மட்டுமேயான விருது. மற்ற நாட்டு, மற்ற மொழித் திரைப்படங்கள் "சிறந்த அயல்நாட்டு மொழித்திரைப்படம்" என்ற வகையில் மட்டுமே கலந்துகொள்ள இயலும். சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் போன்ற விருதுகளை ஹாலிவுட்டே அபகரித்துக் கொள்ளும்.

ஒவ்வொரு நாடும் தங்கள் சார்பாக ஒரு திரைப்படத்தை இவ்விருதுக்கு பரிந்துரைக்கலாம். மொத்தமாக வந்த திரைப்படங்களை ஒரு நடுவர் குழு ஆராய்ந்து அவற்றில் ஐந்து படங்களை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்வார்கள். அந்த ஐந்தில் ஒரு திரைப்படம் மட்டுமே "சிறந்த அயல்நாட்டு மொழித்திரைப்படத்துக்கான" ஆஸ்கர் விருதினை பெற இயலும்.

1957லிருந்தே இந்தியத் திரைப்படங்கள் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. முதன்முதலாக சுனில்தத், நர்கீஸ் நடித்த மதர் இந்தியா எனும் இந்தித் திரைப்படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அத்திபூத்தாற்போல எப்போதாவது ஒரு திரைப்படம் மட்டுமே ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும். 1957க்கும் 1985க்கும் இடையில் மொத்தமாக ஐந்து திரைப்படங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

85க்கு பிறகு தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு இந்தியத் திரைப்படமாவது இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இடையில் 2003ஆம் ஆண்டு மட்டும் ஆஸ்கருக்கு எந்தத் திரைப்படமும் பரிந்துரைக்கப் படவில்லை. இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று திரைப்படங்களும் இறுதிச்சுற்று வரை சென்றிருக்கிறது.

1985ஆம் ஆண்டு தான் முதன்முறையாக ஒரு தென்னிந்தியத் திரைப்படம் இந்த விருதுக்கு இந்தியா சார்பில் சென்றது. அது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, கே.விஸ்வநாதன் இயக்கிய "சுவாதி முத்யம்" என்ற தெலுங்கு திரைப்படம். இத்திரைப்படம் ஆஸ்கருக்கு சென்றது மட்டுமல்லாமல் அந்த ஆண்டின் ஆசியாவின் சிறந்த திரைப்படம், ஆசியாவின் சிறந்த நடிகர் விருதுகளையும் வென்றது.

சுவாதி முத்யத்தைத் தொடர்ந்து நாயகன், அஞ்சலி, தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், குரு (மலையாளம்), ஜீன்ஸ், ஹேராம் என தென்னிந்திய திரைப்படங்களின் அணிவகுப்பு ஆஸ்கர் விருதை நோக்கி தொடர்ந்து படையெடுத்து வருகிறது.

ஆஸ்கர் போட்டியில் கலந்துகொள்ளும் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் சான்றிதழின் ஒரிஜினல் நகல் உங்களுக்காக கீழே :

5 comments:

  1. Anonymous said...

    'ஹாலிவுட் புலவார்ட்' போனீங்கன்னா கோனிகா தியேட்டர் பக்கத்துல நிறைய 'சொவனீர்' கடைகளில் வருஷம் பூராவும் கிடைக்கும்.

  2. said...

    நல்ல தகவல் :)

  3. Anonymous said...

    உபயோகமான தகவல்

  4. said...

    இந்த ஆஸ்கார் மாயை பற்றி ஏற்கனவே படித்தது, இது கிடைக்கவில்லையே என வருத்தப்படத்தேவை இல்லை, ஏன் எனில் போட்டியில் எல்லாப்படங்களுக்கும் சம உரிமை இல்லை. இதைவிட கோல்டன் குலோப், கேன்ஸ் தங்க கரடி விருதுக்கு நாம் முய்ற்சி செய்யலாம்.

  5. Anonymous said...

    நல்ல தகவல். நன்றி.