Saturday, December 29, 2007

ஒல்லி ஒல்லி இடுப்பு, ஒட்டியாணம் எதுக்கு? - த்ரிஷா பயோடேட்டா + Gallery!!


பாலக்காட்டில் பிறந்த த்ரிஷா இன்று பாரெங்கும் வாழும் மனிதர்களை பரவசப்பட வைக்கிறார். மல்கோவாவுக்கு பெயர் போன சேலம் தான் த்ரிஷாவின் பெயரை முதன்முதலில் கவனிக்க வைத்தது. 1999ல் அம்மணி மிஸ் சேலமாம். அதே ஆண்டு சிங்காரச் சென்னையும் அவரை “மிஸ் சென்னை” என்று ஒத்துக் கொண்டது. 2001ல் மிஸ் இண்டியா அமைப்பாளர்கள் “ரொம்ப சூப்பரா சிரிக்கிறாங்க” என்று கூறி "Miss India Beautiful Smile" பட்டம் கொடுத்தார்கள்.

த்ரிஷா அருமையான பாலே டேன்ஸர். மீனைப்போல நீந்துவார். பள்ளி நாட்களில் வாலிபால் சாம்பியனாம். ”ஜூனியர் ஹார்லிக்ஸ்” விளம்பரத்தில் இளம் அம்மாவாக இவர் நடித்தபோது எல்லாக் குழந்தைகளும் ஹார்லிக்ஸை விரும்பிச் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது. அக்காலக் கட்டத்தில் விஜய் டிவியின் யூகிசேதுவின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சியில் “எக்காலத்திலும் சினிமாவில் நுழைய மாட்டேன். மாடலிங் துறையில் தான் இருப்பேன்” என்று சபதம் செய்திருந்தார்.

”ஜோடி” படத்தில் சிம்ரனின் தோழியாக துண்டு வேடத்தில் நடித்தவர் அடுத்தடுத்து லேசா லேசா, மனசெல்லாம், அலை, மவுனம் பேசியதே, எனக்கு 20 உனக்கு 18 என்று டஜன் படங்களுக்கு மேல் ஒப்பந்தமானார். விக்ரமுடன் சாமி, விஜய்யுடன் கில்லி என்று மெகா சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்தவுடன் புகழின் உச்சிக்கே போனார். இதே உயரத்தை ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பெற்ற ஒரே நடிகை த்ரிஷாவாக தான் இருக்கும். தெலுங்கிலும் வர்ஷம், நூ ஒஸ்தானுண்டே நேனு ஒத்துண்டானா?, பவுர்ணமி, சைனிகுடு, ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலு வேறுலே என்று ஹிட் படங்கள்!

விக்ரமோடு பீமா, விஜய்யோடு குருவி என்று த்ரிஷாவின் வெற்றிநடை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தானிருக்கிறது.

இயற்பெயர் :
த்ரிஷா கிருஷ்ணன்

செல்லப் பெயர் :
ஹனி (தேனே உன்னை தேடி தேடி நான் அலைஞ்சேனே!)

பிறந்தநாள் :
04-05-1983 (இருபத்தி நாலு வயசாவுதா?)

உயரம் :
5 அடி 7.5 இன்ச் (அண்ணாந்து தான் பார்க்கணுமா?)

எடை :
55 கிலோ (55 கேஜி தாஜ்மஹால்)

சைஸ் :
34 - 26.5 - 37.5 :-)

கண்ணின் நிறம் :
லைட் ப்ரவுன் (கிறங்கடிக்குதே?)

பள்ளி :
சர்ச் பார்க் காண்வெண்ட் (You know?)

கல்லூரி :
எத்திராஜா (சின்னப் பொண்ணு இவ படிச்சது)

எதிர்காலத் திட்டம் :
எம்பி எம்பியாவது எம்பிஏ முடிக்கணும்

தொழில் :
விளம்பர மாடல், திரைப்பட நடிகை (அதான் எங்களுக்கும் தெரியுமே?)

இணையதளம் :
http://www.trisha-krishnan.com (லேட்டஸ்ட் போட்டோவெல்லாம் அப்டேட் பண்ணுறாங்க)

மின்னஞ்சல் :
trisha_krishnan@yahoo.com (காதல் கடிதம் அனுப்பிய ஒருவருக்கு பதில் மின்னஞ்சலில் செருப்பு அட்டாச்மெண்டாக வந்ததாம்)

பலம் :
யோசித்து முடிவெடுக்கும் தன்மை! (உங்களோட ஹிட் படங்களை பார்த்தாலே தெரியுது)

பலவீனம் :
சின்ன சின்ன விஷயத்துக்கும் ரொம்ப யோசிப்பது! (அதுதானே பலம்னு சொன்னீங்க?)

யாரோடு டேட்டிங் போக ஆசை? :
பில் க்ளிண்டன் (இது மோனிகா லெவின்ஸ்கிக்கு தெரியுமா?)

இரவு வேளைகளில் செய்ய விரும்புவது :
புத்தகம் படிப்பது, இணையத்தை மேய்வது, எப்போதாவது பார்ட்டிக்கு போவது (அட்ரா.. அட்ரா.. அட்ரா)

பயம் :
நெருங்கிய மனிதர்களை இழந்துவிடும்போது வருவது

அடிக்கடி வரும் கனவு :
இரவுவேளையில் தனியாக யாருமே இல்லாத சாலையில் நடந்து போகிறேன். வேகமாக சைக்கிளில் வரும் பையன் ஒருவன் என் கையை பிடித்து இழுக்கிறான் (பையன் அழகா இருக்கானா?)

பிடித்த உணவு :
சிக்கன் (த்ரிஷா சிக்குன்னு இருக்குற ரகசியம்?)

பிடித்த புத்தகம் :
சிக்கன் சூப் ஃபார் த ஃசோல் (இதுலயும் சிக்கனா?)

பிடித்த எழுத்தாளர் :
சிட்னி ஷெல்டன் / டேனியல் ஸ்டீல் (இவங்கள்லாம் யாரு?)

பிடித்த பத்திரிகை :
பெமினா / காஸ்மோபாலிட்டன் (குமுதம், விகடன்லாம் கூட படிப்பீங்களா?)

பிடித்த படம் :
தி இங்கிலிஷ் பேஷண்ட் / சைலன்ஸ் ஆப் த லேம்ப்ஸ் (ரெண்டும் நீங்க நடிச்ச படம் இல்லையே?)

பிடித்த திரை நட்சத்திரம் :
ஜூலியா ராபர்ட்ஸ் / மனிஷா கொய்ராலா (அது சரி!)

ரோல் மாடல் :
க்ளாடியா ஃஷிப்பர், ஐஸ்வர்யா ராய், மது சாப்ரே








2 comments:

  1. Anonymous said...

    அவசியமான பதிவு. நன்றி!

  2. Anonymous said...

    //trisha_krishnan@yahoo.com (காதல் கடிதம் அனுப்பிய ஒருவருக்கு பதில் மின்னஞ்சலில் செருப்பு அட்டாச்மெண்டாக வந்ததாம்)//

    :-))))