Tuesday, December 18, 2007

எவனோ ஒருவன் - பட்டிமன்றம்!


திரைத்துறை விழா என்றாலே படத்தின் ப்ரீமியர், வெற்றி விழா, விருது வழங்கும் விழா என்றிருந்த நிலையை பிரமிட் சாய்மீரா குழுமம் மாற்றி காட்டியிருக்கிறது. 'எவனோ ஒருவன்' திரைப்படம் குறித்த பட்டிமன்றம் ஒன்றினை திரையுலகினரும், பத்திரிகையாளர்களும், சிந்தனையாளர்களும் கலந்துகொண்ட பெரும் விழாவாக கடந்த வாரம் சென்னையில் இக்குழுமம் நடத்திக் காட்டியது.

"எவனோ ஒருவன் உருவாக காரணம் - 'தனிமனித கோபமா?', 'ஒட்டுமொத்த சமுதாயமா?' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்துக்கு நடிகர் சத்யராஜ் தலைமை தாங்கினார். 'தனிமனித கோபமே' என்ற தலைப்பில் திருச்சி ஆர்.மாது தலைமையில் கோவை உமாமகேஸ்வரி மற்றும் மணிகண்டன் அனல்பறக்க பேசினார்கள். 'ஒட்டுமொத்த சமுதாயம்' என்ற தலைப்பில் வழக்கறிஞர் சுமதி தலைமையில் சதீஷ்குமார் மற்றும் மோகனசுந்தரம் பதிலடி கொடுத்தார்கள்.

பத்திரிகையாளர்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டார்கள். பிரபல பத்திரிகையாளர் ஞானி விழாவில் கலந்துகொண்டு வாதங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். படத்தில் நடித்திருந்த இயக்குனர் சீமான், கதாநாயகன் மாதவன், கதாநாயகி சங்கீதா உள்ளிட்டோர் பேசினர்.


பட்டிமன்றத்தை நடத்திச் சென்ற நடுவரான சத்யராஜ் தனக்கேயுரிய லொள்ளு கமெண்டுகளை அவ்வப்போது உதிர்த்து அரங்கத்தை அதிரச் செய்தார். இறுதியாக தீர்ப்பளித்த போது, "பட்டிமன்றத்தில் இருதரப்பும் அருமையாக வாதிட்டார்கள். இந்த வாதங்களுக்கு அடிநாதமாக அமைந்த 'எவனோ ஒருவன்' திரைப்படத்தில் உழைத்த அனைவருக்குமே கிடைத்த வெற்றியாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

3 comments:

  1. said...

    எந்த டீவியிலாவது இதனை ஒளிபரப்புவார்கள?

  2. said...

    எந்த டீவியிலாவது இதனை ஒளிபரப்புவார்கள?

  3. said...

    இந்நிகழ்ச்சியின் மீடியா பார்ட்னரான சன் தொலைக்காட்சி மிக விரைவில் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள்.