Wednesday, December 5, 2007

தூண்டில் - ஜில் ஸ்டில்ஸ்!


'தூண்டில்' - பல பேரின் நம்பிக்கை!

நல்ல திறமையும், அழகும் இருந்தும் இன்னமும் தமிழில் சரியான பிரேக் கிடைக்காத ஷாம், சொர்ணமுகி, ப்ரியசகி போன்ற பேசப்பட்ட படங்களை இயக்கியிருந்தும் தன் முத்திரையை தெளிவாக பதிக்க நினைக்கும் இயக்குனர் கே.எஸ்.அதியமான், அழகு-கவர்ச்சி இருந்தும், வெற்றிப்படங்களில் பங்கேற்றும் கூட தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் அவதிப்படும் திவ்யா (குத்து ரம்யா) ஆகியோர் பெரிதும் எதிர்பார்க்கும் வெற்றி 'தூண்டில்' திரைப்படத்தின் வெற்றி.

"வில்லன் என்பது ஒரு கதாபாத்திரமல்ல. சூழ்நிலையே மனிதமனங்களுக்கு வில்லன்" - இதுதான் கதை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.அதியமான். ஷாம், சந்தியா, திவ்யா, விவேக், ரேவதி நடித்திருக்கும் இத்திரைப்படம் திரையிட தயார்நிலையில் இருக்கிறது. 'லண்டன்' மாநகரை இரண்டரை மணிநேர திரைப்படத்த்துக்குள் அடக்கியிருக்கிறார்களாம்.

திவ்யாவின் கவர்ச்சி தூண்டிலில் ரசிக மீன்கள் சிக்குமா பார்ப்போம்!




0 comments: